பக்கம்:வழுக்கு நிலம்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழுக்கு நிலம் 7 பொத்தான்களைக் கண்ணாடிமுன் நின்று மாட்டிக் கொண்டான். "ஏய்! மூதேவி! அழுதுகொண்டிரு. நான் வரக் கொஞ்சம் நேரமாகும்" என்று கூறிவிட்டுக் 'காபூல் செருப்பைக் காலில் மாட்டிக்கொண்டு வெளியே போனான். அவன் சென்று மறையும் வரையும் அவன் கால் செருப்பு எழுப்பிய டக் டக்' என்ற ஒலி அவள் காதில் ஒலித்துக் கொண்டிருந்தது. அந்த ஒலி நின்றதும் அவள் வெளியே சென்று கதவைத் தாளிட்டு உள்ளுக்கு வந்தாள். வெளியே மழை நின்றிருந்ததால் எங்கும் அமைதி குடி கொண்டிருந்தது. அவ்வப்பொழுது ஊர் நாய்கள் குலைத்துக் கொண்டிருந்தன. நிலா வெளிச்சமாக இருந்ததால் திடீரென தெரு விளக்குகள் அணைக்கப்பட்டன. இருந்தாலும் மழைக் காலமாக இருந்ததால் அவ்வப்பொழுது மேகங்கள் சூழ்ந்து இருண்டு கொண்டிருந்தன. நீர் நிறைந்த குட்டைகளில் எல்லாம் தவளைகள் ஒய்வில்லாமல் கத்திக் கொண்டிருந்தன. தெருவில் அணைந்துவிட்ட விளக்குக் கம்பத்தின்மீது கோட்டான் ஒன்று உட்கார்ந்து கொண்டு தன் கடுமையான குரலைக் காட்டிக்கொண்டிருந்தது. - உள்ளே சென்ற பார்வதி நேரே கட்டிலின்மீது தொப்பென்று விழுந்தாள். நீளமாக இருந்த அவள் உடம்பு குட்டையாக ஆகிவிட்டது என்று சொல்லும்படி கால்களை முடக்கிக்கொண்டு ஒடுங்கிக் கிடந்தாள். விக்கி விக்கி அழுதாள். உடம்பெல்லாம் வியர்வையால் நனைந்துவிட்டது. "அம்மா!" என்று வாய்விட்டு அழுதாள். சிறிது நேரம் பொறுத்துக் கண்களை அகலத் திறந்து பார்த்தாள். சுவரில் மாட்டியிருந்த படம் கண்ணுக்குத் தெரிந்தது. கலியாணத்தன்று எடுத்த படம் அது. கணவரும் தானும் மாலையிட்டுக்கொண்டு நின்றுகொண்டிருந்த படம். இன்னும் அதைச் சிறிது உற்றுப் பார்த்தாள். அந்தப் படத்திலாவது அன்பு என்பது இருக்கிறதா என்று ஆராய்ந்தன அவள் கண்கள். மேலைநாட்டுப் பாணியில் அணிந்திருந்த 'சூட்டு புதிதாக வாங்கிய பூட்டு கொஞ்சங்கூட மடிப்புக் கலையாத கோட்டு இவற்றின் மீது போட்டிருந்த ரோஜா மாலை. ஆம், அன்று ரோஜா மலரைப் போலத்தான் விளங்கினார். அதன் இதழ்கள் உதிர்ந்து போவதைப்போல் அவர் அன்பும் மெல்ல உதிர்ந்து விட்டதோ என்று அந்தப் படத்தை மீண்டும் பார்த்தாள். அதைக் கையில் எடுத்துக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழுக்கு_நிலம்.pdf/9&oldid=898304" இலிருந்து மீள்விக்கப்பட்டது