பக்கம்:வழுக்கு நிலம்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 ரா. சீனிவாசன் சிவராமன் வாயில் பற்றவைத்த சிகரெட்டு கருகிச் சாம்பலாகி விட்டது. "என்ன! உங்கப்பாவிடமிருந்து ஏதாவது." "கடிதம் வந்தது. அதெல்லாம் இப்பொழுது ஒன்றும் அனுப்ப முடியாது" என்று கண்டிப்பாக எழுதியிருக்கிறார். “மடையன்” என்று முணுமுணுத்துக் கொண்டே கொண்டு வந்த காப்பியை அப்படியே வீசி எறிந்தான். மறைந்திருந்த கருப்புப்பூனை ஓடோடியும் வந்து அதை நக்கிக் குடிக்க ஆரம்பித்தது. "நாளைக்குக் காலையில் மூட்டை கட்டு!” அவளுடைய கண்களிலிருந்து விழலாமா வேண்டாமா என்று தேங்கிக் கிடந்த அந்த இரண்டு துளிகளும் ஒன்றன்பின் ஒன்றாகக் கீழே விழுந்தன. "அவர் கொடுக்காவிட்டால் நான் என்ன செய்ய முடியும்?" - "அப்பொழுது உன் வாழ்வைப் பற்றி அந்த மடையனுக்கு." பார்வதி விக்கி விக்கி அழுதாள். "அழுகிறாயா, அழு. போ. உன் அப்பாவிடத்தில் சொல்லி அழு. அன்று கலியாணத்திலே பத்தாயிரம் தருவதாகச் சொன்னானே, அந்தச் சொல்லைக் காப்பாற்ற வேண்டாமா? போ. பத்தாயிரத்தோடு வந்து சேரு. இல்லா விட்டால் இங்கே எட்டிப் பர்ர்க்காதே. கட்டு மூட்டை கட்டு" பேசாமல் கற்சிலையைப் போல அசையாமல் நின்றாள் என்று கூறினால் அவ்வளவு பொருத்தமாக இருக்காது. கற்சிலைக்கு அவளைப் போன்ற உணர்ச்சி யிருக்க முடியாது. விம்மி விம்மி அழத் தொடங்கினாள். "போ! என்முன் நிற்காதே. போ! நான் வெளியே போகிறேன். கதவைத் தாளிட்டுக் கொள்!" என்று சொல்லி விட்டுக் கண்ணாடியின் முன் நின்று தலையை வாரிக் கொண்டான். தலை நன்றாகப் படிவதற்கு, "வாசலைன்” எண்ணெய் போட்டுப் படிய வாரிக்கொண்டான். முகத்திற்குக் குளிர்ச்சிக்காக "ஸ்நோ பூசிக்கொண்டு பவுடர் பூசி அது தெரியாமல் இருப்பதற்காகக் கைக்குட்டையால் துடைத்துக் கொண்டான். அவன் போட்டிருந்த ஓபன் சர்ட்டுக்குப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழுக்கு_நிலம்.pdf/8&oldid=898280" இலிருந்து மீள்விக்கப்பட்டது