பக்கம்:வழுக்கு நிலம்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 ( ரா. சீனிவாசன் அவமானப்படுத்திய அவனுக்கு அதுதான் சரியான வழி. நாலுபேரு மத்தியிலே வைத்து வாழ வக்கு இல்லை என்று சொல்லட்டுமே. அதற்கப்புறம் இந்த வீட்டிலே உனக்கென்ன ஒரு பிடி சோறு இல்லாமலா போய்விடும்? நம்ம கவுரவத்தை நிலைநாட்டக் கட்டாயம் நோட்டீசு கொடுத்துத்தான் ஆகவேண்டும்". "அவர் வைத்து வாழ வழியில்லை என்று எங்கே சொன்னார்? நீங்கள் தானே கூட்டிக்கொண்டு வந்தீர்கள். அண்ணனுக்குப் பெண் பார்க்க நான் அவசியம் என்று சொல்லித்தானே அழைத்துக்கொண்டு வந்தீர்கள். இப்போது நீங்கள் தானேப்பா அழைத்துக்கொண்டு போய்விடவேண்டும். அதுதானே முறை." "அவன் பொல்லாதவனாக இருக்கிறானே. போனால் சொன்ன சொல்லைக் காப்பாற்றினாயா என்று கேட்பானே. அவனுக்கு நான் என்ன பதில் சொல்வது? எங்கே பத்தாயிரம்- எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பேசுவானே! அவனிடம் நான் நேரில் போனால் பலனில்லை. அண்ணன் வேறே, நம்மை மதிக்காதவன் வீட்டுக்கு நாம் போகவே கூடாது என்கிறான்; அவனே வந்து அழைத்துப்போகட்டும். நான் செய்தது எல்லாம் தப்புத்தான்மா. இனிமேல் நான் என்ன செய்வது? சொல்லேன்; எனக்கு ஒன்றும் புரியவில்லை யம்மா." "எல்லாம் பொறுங்கள் அண்ணனுக்கு ஆஸ்தி வரும். அதில் அண்ணி இந்தா பத்தாயிரம் என்று எடுத்துக் கொடுப்பாள். அப்போது நீங்கள் அவருக்குக் கடிதம் எழுதினால் அவர் வந்து அழைத்துப் போவார். எல்லாம் கவுரவமாக முடிந்து விடும்." "போதும்பா போதும். நீங்கள் இனிச் சும்மா இருந்தால் போதும். என்னைப் பேசாமல் பாழுங்கிணறு ஒன்று காட்டி அதில் விழச் சொல்லுங்கள். அதுதான் சரி." மெளனம் நிலவியது. அவர் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் அந்த இடத்தைவிட்டு எழுந்து போனார். தனியாக விடப்பட்ட பார்வதி சன்னல் வழியாகத் தெருவை நோக்கினாள். வெறிச் சென்று இருந்தது. நடமாட்டமே இல்லை. தன்னைப் போலவே அந்தத் தெரு தனிமையாக இருப்பதை உணர்ந்தாள். "ஏன் பார்வதி சாப்பிடாமல் இருக்கிறாய்" என்று கேட்டு அவள் அன்னை அழைத்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழுக்கு_நிலம்.pdf/100&oldid=897980" இலிருந்து மீள்விக்கப்பட்டது