பக்கம்:வழுக்கு நிலம்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழுக்கு நிலம் 97 மறுபடியும் அவள் துடைப்பத்தை எடுத்துச் சேர்த்து வைத்த குப்பையை ஒரு முறத்தில் அள்ளிக் கொண்டிருந்தாள். பார்வதி அந்த இடத்தைவிட்டு எழுந்தாள். உள்கூடத்தில் வந்து உட்கார்ந்தாள். தான் இனி அந்த வீட்டில் எந்த வேலையும் செய்ய உரிமை இல்லாமையை உணர்ந்தாள். நேரே அம்மாவின் மடியில் விழுந்து விக்கி விக்கி அழுது ஆறுதல் பெறலாமா என்று எண்ணியது அவள் மனம், அம்மா எதிரே வந்து கொண்டிருந்தாள். அம்மாவிடத்தில் அழுது ஆறுதல் பெறுவதைவிட அப்படியே சீறி விழலாமா என்ற எண்ணம் தோன்ற ஆரம்பித்தது. "நீ உண்மையில் பெற்ற அன்னைதானா? உனக்கு உணர்வு என்பதே இல்லையா? நீ உரிமையிழந்து அப்பாவின் அதிகாரத்திற்கு அடங்கி அடிமை போல வாழ்க்கை நடத்திய உனக்கு உணர்வு எங்கே இருக்கப் போகிறது? உரிமைக் குரல் உன்னிடத்திலிருந்து எங்கே எழப்போகிறது?" என்று கேட்டு விடலாம் போல அவளுக்குத் தோன்றியிருக்க வேண்டும். அத்துணையும் அவள் தன் அன்னையைப் பார்த்த அந்தக் கோபமான பார்வையில் அடங்கி இருந்தது. ஒரு பெரிய கேள்வி அந்தப் பார்வையில் எழுதி ஒட்டியிருந்தது போல இருந்தது. அதற்குள் "மாமி! மாமி!” என்று மீனாட்சியின் குரல் கேட்டது. "அண்ணி கூப்பிடுகிறாள். வர்ரேம்மா இரு" என்று அந்த இடத்தில் அதிகநேரம் இல்லாமல் எழுந்து விட்டாள். 'பார்வதி ! பார்வதி என்று குரல் கொடுத்துக் கொண்டே சிவக்கொழுந்து கூடத்திற்கு வந்தார்.

  • * *

"நான் அவனுக்கு ஒரு நோட்டீஸ் கொடுத்து விடலாம் என்று நினைக்கிறேன்'ம்மா. மகளை வைத்து வாழாவிட்டால் ஜீவனாம்சம் கேட்டு விடலாம் என்று நினைக்கிறேன்." "ஏனப்பா! ஒரு பிடி சோறு எனக்கு இந்த வீட்டில் இல்லையா அப்பா? அதற்குக் கூட உங்களிடத்தில் வழியில்லை என்று வெளிப்படையாகச் சொல்லி விடுங்களேன்'பா! இந்த அரைசாண் வயிற்றுச் சோற்றுக்காக நான் போய் அவரிடம் மன்றாட வேண்டுமா...? அதற்கு நான் நீதிமன்றம் போக வேண்டுமா? வேண்டாம்பா வேண்டாம்.” "இல்லே'மா. அவனுக்கு அப்பத்தான் உணர்ச்சி வரும். நம்ம கலியாணத்திற்கு வராமல் நாலுபேரு மத்தியிலே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழுக்கு_நிலம்.pdf/99&oldid=898325" இலிருந்து மீள்விக்கப்பட்டது