பக்கம்:வழுக்கு நிலம்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 ( ரா. சீனிவாசன் பார்வதி அதை அவ்வளவாகப் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. "அவர்கள் வெளியே போனது புழுக்கமான அறையில் சன்னல்கள் திறந்து வைத்தது போல இருந்தது. "ஏன் பார்வதி இன்று ஒருமாதிரியாக இருக்கிறாய்?" "உண்மையான ஞானம் பெறுவதற்கு இன்றுதான் வழி ஏற்பட்டது. இந்த வீட்டில் இருப்பதற்கு எனக்கு உரிமை கிடையாது என்று ஒருவர் ஞானோபதேசம் செய்தார். அதிலிருந்து அதைப்பற்றித்தான் நினைத்துக் கொண்டிருக் கிறேன். அம்மா." "யாரம்மா அந்த ஞானகுரு? உன் மானத்தை இந்த வயதில் அப்படிக் கலைத்துவிட்டது?" - "அவர் ஒன்றும் கலைக்கவில்லை. உண்மையை உணர்த்தினார்.” "ஏன் பார்வதி? இப்படிச் சுற்றி வளைத்துப் பேசுகிறாய்? தெளிவாகச் சொல்லேன்." "சொல்றேன். வீட்டுக்கு விளக்கு வைத்து விட்டுவா. நிதானமாகப் பேசலாம்.” அவள் தாயார், வீட்டில் முன்னரே துடைத்துவிட்டுப் போன விளக்கை ஏற்றிவைத்தாள். சிறிது வத்தியை இறக்கி வைத்துவிட்டுத் திரும்பவும் பார்வதி உட்கார்ந்து கொண்டிருந்த தெருப்பக்கம் வந்து உட்கார்ந்தாள். உள்ளே இருந்த விளக்கு இவள் மனம் விட்டுப்பேசத் தொடங்குவது போலவே ஒளிவிட்டு எரியத் தொடங்கியது. "ஏன்'மா. எத்தனை நாளைக்கு இப்படியே நான் இருக்க முடியும்? பார்க்கிறவர்கள் என்ன சொல்லுவார்கள்?" "மாமியார் வீட்டுக்குப் போக வேண்டுமென்று இந்தக் காலத்துப் பெண்கள் வாய்விட்டுச் சொல்கிறார்கள். அந்தக் காலத்திலே காற்றடித்ததோ, மழை பெய்ததோ எப்படி எப்படியோ வாழ்ந்தோம்." "உங்கள் கதையைக் கேட்கவில்லையம்மா என்னமோ இங்கு இருந்தால் என் கதை நல்ல தங்காள் கதையாக மாறி விடுமே என்று அஞ்சுகிறேன். அதைவிடப் பொல்லாத தங்கையாகவே இருந்து உயிர் வாழலாம் என்று ஆசைப் படுகிறேன். எவ்வளவு சீக்கிரம் நான் இந்த இடத்தை விட்டுப் போய் விடுகிறேனோ அவ்வளவும் நல்லது என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழுக்கு_நிலம்.pdf/102&oldid=897984" இலிருந்து மீள்விக்கப்பட்டது