பக்கம்:வழுக்கு நிலம்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழுக்கு நிலம் 101 நினைக்கிறேன். அதுதான் நான் பிறந்த அகத்திற்குச் செய்யக் கூடிய கடமை என்று எண்ணுகிறேன்.” "போயேன்மா. உன்னை யாரம்மா வேண்டாம் என்று சொல்லுவது. இதோ.பாரு மாப்பிள்ளை தானாக வந்து அழைத்துப் போவான். கட்டின மனைவியை விட்டு விட்டுக் காலந்தள்ள அவன் என்ன காஷாயம் போட்ட சந்தியாசியா என்ன? கேட்டுப் பார்ப்போம். கிடைத்தால் நல்லது என்று எண்ணி இருப்பான். இதைப் போல எவ்வளவோ பேரைப் பார்த்திருக்கிறேன் அனுபவத்திலே, பெண்டாட்டியை அனுப்புகிறாயா இல்லையா என்று அவனே ஒரு நாளைக்குச் சண்டை போடப் போகிறான். நீயும் பார்க்கத்தான் போகிறாய்.” "எனக்கு அதில் நம்பிக்கை இல்லையம்மா. அங்கே அவருக்குக் கடன்காரர் தொல்லை சொல்லி முடியாது. பணம் தான் அவருக்கு மிகவும் முக்கியமானது. அண்ணன் எப்படி யாவது இந்தப் பேச்சை எடுத்துப் பேசவேண்டும். எஞ்சி இருக்கிற நிலபுலன்களையாவது என்மேலே எழுதச் செல்லிடேன்'மா. அண்ணனுக்குத்தான் அவர்கள் முப்பதாயிரம் கொடுக்கப் போவதாகச் சொல்கிறார்களே, அண்ணிக்கு நகை நட்டு இருபதாயிரம் செய்து வைத்தீர்கள். எனக்குக் கொடுப்பதிலே இனிமேல் என்னம்மா கஷ்டம் இருக்கிறது? பத்தாயிரம் என்பது ஒரு நாலாயிரமாவது கொடுத்தால் அவர் கஷ்டம் தீர்ந்துவிடும். இதுதான்மா நீ எனக்குச் செய்ய வேண்டியது. பெற்ற மகளுக்கு இதுகூடச் செய்யாவிட்டால்-” "என்னமோ- மாணிக்கத்திடம் சொல்லிப் பார்க்கிறேன். அவன் கட்டாயம் உனக்குச் செய்வான். நீ ஏன் கவலைப் படுகிறாய்? ஒன்றுக்கும் கவலைப்படாதே. எல்லாம் அண்ணன் கவனித்துக் கொள்வான்." "ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே" என்ற இந்தப் பாட்டுத்தான் எனக்கு ஞாபகத்திற்கு வருகிறது. அண்ணியின் மனம் எப்படி இருக்கிறதோ?" "அவள் என்ன சொல்வது? மாணிக்கம் படித்த பையன். அவன் பெண்டாட்டிப் பேச்சு கேட்டுக்கொண்டு நடக்கமாட்டான். நீ ஒன்றுக்கும் கவலைப்படாதே." இருவரும் பேசிக்கொண்டே இருந்தார்கள். மணி ஒன்பது அடித்தும் அந்த இடத்தைவிட்டு எழுந்ததாகத் தெரியவில்லை. எந்த முடிவுக்கும் வரவில்லை என்பது முடிவில்லாது. அவர்கள் பேசிக்கொண்டிருந்த பேச்சு எடுத்துக் காட்டியது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழுக்கு_நிலம்.pdf/103&oldid=897986" இலிருந்து மீள்விக்கப்பட்டது