பக்கம்:வழுக்கு நிலம்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 ல் ரா. சீனிவாசன் 15 "சார், ஐயா இருக்கிறாரா?” இருக்கிறார் என்று சொல்லுவதா அல்லது இல்லை யென்பதா என்று தெரியாமல் சிறிது நேரம் தயங்கினாள். சிவராமனைத் தேடி வந்தவர் பெரும்பாலோர் கடன்காரர்க ளாகவே இருந்ததால் கொஞ்ச நாளையில் பொய் சொல்வது சிவகாமிக்கு அவசியமான தேவையாகி விட்டது. இருக்கிறார். என்று சொன்னால் உடனே அவர்கள், எப்பொழுது கொடுக்கப் போகிறீர்கள்? எத்தனை நடை நடப்பது? உண்டா, இல்லையா என்று சொல்லி விடுங்கள்? என்பதும் இவன் 'நாளைக்கு இதே நேரத்தில் வந்துவிடுங்கள் என்று சொல்வதும் அவர்கள் மீண்டும் அவன் சொற்களைக் கொஞ்சம்கூட அலட்சியப்படுத்தாமல் வருவதும், அதே நேரத்தில் சிவராமன் இல்லாமல் போவதும், அவர்கள் பெரிய மனுஷனுங்க நடத்தையெல்லாம் இப்படித்தான் இருக்கும் என்று வாழ்க்கையை ஆராய்ந்து உடனே முடிவு கட்டுவதும் வழக்கமான நிகழ்ச்சிகளாய் விட்டன. * அதனால்தான் வருகிறவர்களின் தன்மை தெரிந்து, உண்டு, இல்லை என்று சிவராமனைக் கேட்டுச் சொல்ல வேண்டிய நிலைமையில் சிவகாமி பழக்கப்பட்டுப் போய் விட்டாள். "சிவா! யாரோ வந்திருக்கிறார்கள்.” விஷயம் தெரிந்தவளைப் போல, "இல்லை என்று சொல்லி விடு" என்று சுருக்கமாய்ச் சொல்லி விட்டான். வந்து நின்றவரிடத்தில், "இல்லை. வெளியே போய் இருக்கிறார்" என்று சொல்லிக் கதவை மூடிவிட்டு உள்ளே வந்தாள். "எந்த நேரமும் வீட்டில் இருப்பது இல்லை. சரியான ஆள்தான்" என்று முணுமுணுத்து விட்டு அந்த வீட்டை ஒரு முறைப்பு முறைத்து விட்டுச் சலிப்போடு திரும்பினான் வந்து விசாரித்தவன். "ஏன் தம்பி! இவனுக்கு ஏதாவது பாக்கி கொடுக்க வேண்டுமா?" "இல்லாவிட்டால் நம்மிடத்தில் அவனுக்கு என்ன வேலை ? வீட்டை வைத்து மூவாயிரம் வாங்கியிருந்தேன். அதற்கு இரண்டு மாதமா வட்டி கொடுக்கவில்லை.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழுக்கு_நிலம்.pdf/104&oldid=897988" இலிருந்து மீள்விக்கப்பட்டது