பக்கம்:வழுக்கு நிலம்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழுக்கு நிலம் 105 களுடைய எதிர்காலம், நான் விட்டுச்செல்லும் இடத்திலிருந்து அவர்கள் தொடர்ந்து நடத்தும் வாழ்ககை, அப்போது அவர்கள் நிலைமை இவை எல்லாம் எண்ணிப் பார்த்துத்தானே வாழவேண்டும். என் நிலைமையையே சமாளிக்க முடியாத இந்நிலையில் மனைவியோடு எப்படி வாழ முடியும்? அதற்கு அவள் தந்தை மட்டும் ஏன் பொறுப்பில்லாதவர் போல் இருக்கவேண்டும்? தன் மகள் அமைதியாக வாழவேண்டும் என்ற ஆவல் அவருக்கும் மட்டும் ஏன் இருக்கக்கூடாது? நான் மட்டும் ஏன் சோர்ந்து பின் வாங்கவேண்டும்? அதெல்லாம் முடியாது. பணம் இல்லாமல் அவளை அழைத்து வரக்கூடாது. முடியாது. போகட்டும், பத்தாயிரம் கொடுக்கிறேன் என்ற அவர், பாதியாவது கொடுக்க ஏன் முன்வரக் கூடாது? ஆறின கஞ்சி, பழங்கஞ்சி என்பார்க்ளே பழங்கஞ்சியும் இல்லாமல் எப்படி வாழ்க்கை நடத்த முடியும்? நான் எப்படியும் ஐந்தாயிரமாவது பெற்றே தீர வேண்டும்” என்று அவன் முடிவுக்கு வரும்வரை அந்தச் சிகரெட்டும் எரிந்து கொண்டே இருந்தது. சாம்பலும் ஒருபக்கம் சோர்ந்து நின்று விழலாமா வேண்டாமா என்று தயங்கிக் கொண்டிருந்தது. சாம்பலைத் தட்டிவிட்டு மறுபடியும் ஓர் இழுப்பு இழுத்துவிட்டு அதற்காக என்று வைக்கப்பட்டிருந்த சிறு கோப்பையில் போட்டுவிட்டு எழுதுவதற்கு முனைந்தான். யாருக்கு எழுதுவது என்று சிந்திப்பதில் சிறிதுநேரம் வீணாயிற்று. பிறகு பார்வதிக்கே அவன் எழுதத் தொடங்கினான் என்பது 'அன்புள்ள என்று ஆரம்பித்ததி லிருந்து தெரிந்தது. எழுதிய கடிதத்தை உறையுள் இட்டு மேஜை மேல் வைத்தான். மறுபடியும் தன் கடமைகளை முடித்துக் கொண்டு வேலைக்குப் புறப்பட வெளியே வந்து நின்றான். அவன் புறப்படும் நேரத்தில் அவனுக்காக வைக்கப்பட்ட காப்பியைக் குவளையில் ஊற்றி வெளியே கொண்டு வந்து கொடுத்தாள் அவன் தமக்கை "கடிதம் எழுதினாயா? அப்படியே அவருக்கும் ஒரு கடிதம் எழுதிவிடு. என்னைப் பம்பாய்க்கு அழைத்துப் போகச் சொல்லி எழுது.” "சரி, நீயே எழுதிக்கொள்” என்று ஒரு தபால் உறையை அவளிடத்தில் கொடுத்துவிட்டுத் தெரு நோக்கி நடந்தான். 'கட்டாயம் அவளை அழைத்துக் கொண்டு வர வேண்டும். அழைத்து வராவிட்டால் நான் சும்மா இருக்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழுக்கு_நிலம்.pdf/107&oldid=897994" இலிருந்து மீள்விக்கப்பட்டது