பக்கம்:வழுக்கு நிலம்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 () ரா. சீனிவாசன் மாட்டேன்” என்று அவன் அந்த இடத்தைவிட்டுப் போன கொஞ்ச நேரம் பொறுத்தும் விடாமல் சொல்லிக் கொண்டிருந்தாள். அவன் தலையை ஆட்டிக்கொண்டு சென்றது "போதும் நிறுத்து" என்று சொன்னானா அல்லது கட்டாயம் அழைத்து வருகிறேன் என்று சொன்னானா என்பது தெரியாமல் அப்படியே நின்றாள். உள்ளே மீதியிருந்த காப்பி ஆறிவிடுமே என்ற எண்ணம்வர வீட்டுக்குள் நுழைந்தாள். 16 அண்ணி வரவரத் தன்னிடத்தில் முகம் கொடுத்துப் பேசாமல் இருப்பதை எண்ணிப் பார்வதி மிக வருந்தினாள். எப்படியாவது மனக்கசப்பு நீளாமல் பிறந்த அகத்தை விட்டுப் போய்விட வேண்டும் என்ற நோக்கம் நாளொரு மேனியும் பொழுதொரு சிந்தனையுமாக வளர்ந்தது. முன்னெல்லாம் அண்ணி சினிமாவிற்குப் போய் வந்தால் அந்தக் கதையில் வரும் நிகழ்ச்சிகளையும் நடிகைகளின் நடிப்பையும், நகைச்சுவைப் பேச்சுகளையும் சொல்லிச் சொல்லிச் சிரித்துக்கொண்டிருப்பாள். இப்போது சென்று பார்த்த சினிமாவின் பெயரைச் சொல்லுவதையும் நிறுத்திக் கொண்டது அவளுக்கு அண்ணியிடம் என்ன பேசுவது என்று தெரியாத நிலைக்குக் கொண்டு வந்து விட்டது. மீனா! என்று கூப்பிட்ட வண்ணம் மாணிக்கம் வெளியிலிருந்து வந்தான். மீனாட்சிக்குப் பிடித்தமான வாரப் பத்திரிகைகளையும், சினிமாப் புத்தகங்களையும் வாங்கிக் கொண்டு வந்தான். நேரே சமையல் அறைக்குள் நுழைந்து அவள் எதிரில் போட்டான். "என்ன சமையல் மீனா?” "அவியல் குவியல் ஒன்றும் இல்லை இந்தச் சமையலில்" என்று வேடிக்கையாக ஆரம்பித்தாள். "ஒகோ. நேற்றுப் பார்த்த சினிமா வசனத்தை அப்படியே ஒப்பிக்கின்றாயோ' அப்போது அடுப்பில் முருங்கைக்காயும் கத்திரிக்காயும் ஒன்றை ஒன்று தழுவிக் கொண்டு வெந்து கொண்டிருந்தன. "நீ மடைத் தொழிலில் வல்லவள். அதனால் நீ ஒரு மடையள்.” “மடையளின் கணவன் ஆண்பாலில் சொன்னால்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழுக்கு_நிலம்.pdf/108&oldid=897996" இலிருந்து மீள்விக்கப்பட்டது