பக்கம்:வழுக்கு நிலம்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழுக்கு நிலம் 107 "மடையன். கெட்டிக்காரி நீ! வா மீனா, அடுப்பங் கரையை கட்டிக்கொண்டு எப்பொழுது பார்த்தாலும் அழவேண்டியதுதானா?” "அடுப்பு ஊதினால் என் மூச்சுக் காற்றையும் ஏற்கும். உங்களிடத்தில் ஒதினால் என் பேச்சுக்கூட ஏற்காதே." "மீனா! நீ பேசு. பேசிக்கொண்டேயிரு. மூச்சு உள்ள வரை பேசு. கொஞ்சம் ஒய்வு எடுத்துக்கொள். மீண்டும் பேசு. 2 yy பேசு. பேசுவாய் நீ. "பேசுகின்ற வாயா? நான் வாயாடி என்று இப்படி மறைமுகமாகப் பேசுகிறீர்கள். நீங்கள் வாயாடி, உங்கள் தங்கை வாயாடி, உங்களைப் பெற்று வளர்த்த தாய் இருக்கிறாளே அவள் வாயாடி' என்று சொல்லியவண்ணம் பேதமறக் கலந்து வெந்துகிடந்த கத்திரிக்காய் முருங்கைக்காயை அடுப்பிலிருந்து எடுத்து இறக்கி வைத்தாள். இறக்கி வைத்த அந்தக் கருகிய கடாயினின்று புகை மெல்ல மேல் நோக்கி எழுந்து கொண்டிருந்தது. அவர்கள் பேசிய சொற்கள் ஒன்றும் பாதியுமாகக் காதில் விழுந்து கொண்டிருந்த காரணத்தால் பார்வதியின் மனத்தில் வேதனை புகைந்து கொண்டிருந்தது. ஆனால் புகைச்சல் வெளிவராமல் அடங்கிக் கிடந்தது. "பேசா மடந்தையின் பின்வந்த பேரழகி கூசாமல் பேசும் நின் உரைதான் கேட்டால் என் மனம் வருந்தும்; கேளாவிட்டால் நீ வருந்துவாய். என் செய்வேன் இனிநான் சொல்” என்று கவிதையைப் போல வேடிக்கையாகப் பேச ஆரம்பித்தான். இளமையின் துள்ளலில் வரும் பேச்சுரையோ, சினிமாவைப் பார்த்துவிட்டு வந்து பேசும் வசன உரையோ என்று பார்வதியால் முடிவு கட்ட முடியவில்லை. அண்ணன் பேசிய வேடிக்கைப் பேச்சில் அவளால் தவறு காண முடிய வில்லை. அண்ணி ஏன் தன்னையும், தன் அன்னையையும் அவர்கள் வேடிக்கைப் பேச்சில் இழுக்க வேண்டும் என்பதை எண்ணும் பொழுது அவளுக்கு ஆறவில்லை. அதற்குள் தபால் என்று சொல்லி இரண்டு கடிதங்களை உள்ளே போட்டு விட்டுச் சென்றார் தபால்காரர். தபால் என்ற சிறு ஒலி கேட்டு வெளியே வந்தான் மாணிக்கம். அதே சமயம் அது அவரிடத்திலிருந்து வந்திருக்குமோ என்ற ஆவலால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழுக்கு_நிலம்.pdf/109&oldid=897998" இலிருந்து மீள்விக்கப்பட்டது