பக்கம்:வழுக்கு நிலம்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 ( ரா. சீனிவாசன் அதை அவாவிய உள்ளத்தோடு வரவேற்றாள் பார்வதி. மாணிக்கம் கையில் வந்த கடிதத்தை உற்றுப் பார்த்தான். "இந்தா! உனக்குத்தான் வந்திருக்கிறது” என்று பார்வதியிடம் ஒரு கடிதம் கொடுத்துவிட்டு மற்றும் ஒன்றை எடுத்துக்கொண்டு சமையல் அறைக்குச் சென்றான். "அன்புள்ள...” என்று ஆரம்பித்த கடிதம் தேனும் பாலும் கலந்த சுவை போல இனித்தது. பார்வதியின் உள்ளம் தழைத்தது. ஐந்தாயிரமாவது கேள். அதையும் மறுத்தால் ஒப்புக்கொள்ள முடியாது என்பதையும் சொல்லி விடு" என்று முடித்திருந்த கடிதத்தைப் பலமுறை படித்தாள். களைத்து நடந்துகொண்டிருக்கிற ஒருவனுக்கு பஸ்ஸில் நிற்கவாவது இடம் கிடைத்ததைப் போன்றிருந்தது அவள் நிலைமை. இனி எப்படியும் தன் வாழ்வு சீர்படும் என்ற சிந்தனையில் அவள் உள்ளம் மிதந்து கொண்டிருந்தது. அதனால் அவள் நடையில் உற்சாகமும், செயலில் ஊக்கமும் பிறந்தது. "அம்மா! கடிதம் வந்திருக்கிறது." "வந்து அழைத்துப் போகிறேன் என்று சொல்லி எழுதி யிருக்கிறதா!" "ஆமாம். ஆனால் ஐந்தாயிரமாவது வேண்டுமாம்." அதே நேரம் அவள் அப்பாவும் அலுத்துக் களைத்து 'அப்பாடா என்று வந்து உட்கார்ந்தார். "ஏன், உங்களைத்தான். மருமகன் கடிதம் எழுதி இருக்கிறான்." "நல்லது. என்னவாம். வந்து அழைத்துப் போகிறேன் என்று ஏதாவது." "எழுதியிருக்கிறான். ஆனால் ஐந்தாயிரமாவது வேண்டுமாம்.” - "ஆமாம்பா. வீடு ஏலத்திற்கு வர இருக்கிறதாம். ஐந்தாயிரமாவது இருந்தால்தான் சுற்று முற்றும் கடன் கொடுத்து நிம்மதியாக வாழ முடியுமாம். கடன்காரர்கள் வீட்டை ஏலம் போட்டு எடுத்துக் கொண்டால் அப்புறம் நிற்க நிழலில்லாமல் போய்விடும். இருக்க வீடு இல்லாமல் அந்தச் சென்னையில் என்ன செய்வது? எப்படியாவது இந்தப் பணமாவது கொடுத்துவிடப்பா.” "அவன் வீட்டுக் கடனைக் கொடுக்க நம் வீட்டுச் சொத்தை விற்க வேண்டுமா! நன்றாக இருக்கிறது அவன் கேட்பதும் அதற்கு நீ பரிந்து பேசுவதும்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழுக்கு_நிலம்.pdf/110&oldid=898004" இலிருந்து மீள்விக்கப்பட்டது