பக்கம்:வழுக்கு நிலம்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழுக்கு நிலம் 109 'என்னப்பா, எதுக்காவது பயன் படுத்திக் கொள்ளட்டுமே. நீங்கள் கொடுப்பதைக் கொடுத்துவிட்டால் அப்புறம் அவர் பாடு.” அப்பொழுதுதான் பேச்சின் நடைமுறையைக் கேட்டுக் கொண்டிருந்த மாணிக்கம் கூடத்திற்கு வந்தான். "ஆமாம். அவர் செய்கிற ஊதாரித்தனத்திற்கு எல்லாம் நாம் பணம் கொடுத்துக் கொண்டிருக்க வேண்டுமா? அவர் செய்கிற வீண் செலவால்தானே கடன் ஆகியிருக்க வேண்டும்? மேலும் மேலும் அவர் கடன் வாங்காமல் இருப்பார் என்பதில் என்ன உறுதி இருக்கிறது?" "அண்ணா, நீ கூடவா இப்படி மாற வேண்டும்." "இல்லை. உண்மையைத்தான் சொல்கிறேன். எவ்வளவு கொடுத்தாலும் அவர் அதைக் காப்பாற்றமாட்டார். அதற்குக் காரணம் எனக்குத் தெரியும். சொன்னால் உன்மனம் புண்படும். அதற்காகத்தான் நான் சொல்லத் தயங்குகிறேன்.” "உங்களுக்கு அவரைப்பற்றி இங்கிருந்துகொண்டு என்ன தெரியும்? அவரிடம் உள்ள ஒரே குறை வாங்கின கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாமை. அந்த ஒரு குறையால்தான் அதிக வட்டிக்குக் கடன்வாங்கி, அதைத் திருப்பிக் கொடுக்க முடியாமல் அவசரத்திற்குக் கிடைத்த இடத்தில் கடன் வாங்கி விடுகிறார். இந்த ஒரு குறையால்தான் அவர் உங்கள் கண்களுக்குச் செலவாளியாகத் தோன்றுகிறார்.” "இல்லை பார்வதி. உனக்குத் தெரியாது. சும்மா இரு. பிறகு பார்த்துக் கொள்ளலாம். பணத்தைப் பாழ்படுத்த வேண்டாம். இதுதான் நான் சொல்ல விரும்புவது." அடங்கியிருந்த அன்னை கொஞ்சம் தடைநீங்கிப் பேச ஆரம்பித்தாள். "ஏன்'டா, நீ வந்து குறுக்கே நிற்கிறாய். சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி குறுக்கே நிற்கிறாப் போலத்தானே இருக்கிறது நீ பேசுவது. உங்கள் அப்பாவுக்கு மகளுக்குக் கொடுக்க மனம் வராது. போதாக் குறைக்கு நீ வேறு காரணம் சொல்ல வந்து விட்டாய். மாட்டேன், கொடுக்கமாட்டேன். எல்லாச் சொத்தும் எனக்குத்தான் வேண்டும் என்று வெளிப் படையாகச் சொல்லிவிடேன். இதிலே வேறு காரணம் இருக்கிறது அப்படி இப்படி என்று சொல்லி வீண்வார்த்தை பேசி ஏன் தடுக்கிறாய்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழுக்கு_நிலம்.pdf/111&oldid=898006" இலிருந்து மீள்விக்கப்பட்டது