பக்கம்:வழுக்கு நிலம்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 ( ரா. சீனிவாசன் பார்வதி வாழா வெட்டி ஆவதைவிட ஐந்தாயிரம் நஷ்டம் அடைந்தால்தான் போவுது. அவள் பச்சைப் பசேல் என்று வாழ வேண்டாமா? காலா காலத்திலே கணவன் வீட்டுக்குப் போகாமல் கண் கலங்கி நிற்க வேண்டுமா? ஊரார் எல்லாம் என்ன சொல்லுகிறார்கள். வாழ்கிற பெண்ணை வாழாமல் வைத்திருக்கிறார்கள் என்ற பெயர் நமக்குத்தானே. ஊரில் இருக்கிற பெண்கள் மகளை அனுப்ப வில்லையா என்று என்னைத்தானே கேட்கிறார்கள். உங்களுக்கென்ன! ஆண் பிள்ளைகள் வெளியே போய்விட்டால் இதெல்லாம் எப்படித் தெரியப் போவுது? முதலிலே அவளை அனுப்ப ஏற்பாடு செய்யுங்கள். அதற்காக ஐந்தாயிரம் என்று பார்க்காதீர்கள்” என்று எப்பொழுதுமே எதிர்த்துப் பேசாத பார்வதியின் தாய் விடாமல் பேசித் தான் சொல்ல விரும்பிய அனைத்தையும் ஒரே மூச்சில் கொட்டிவிட்டாள். சிறிது நேரம் அமைதி நிலவியது. எப்பொழுதும் அடங்கி அப்பாவை எதிர்த்துப் பேசாத தாய் இவ்வளவு தூரம் பேசியதால் பார்வதி மகிழ்ச்சி அடைந்தாள். தனக்கு உதவிக்குத் தன் அன்னை இருப்பது அவளுக்கு அளவற்ற உற்சாகத்தைக் கொடுத்தது. அம்மா சொன்னதற்கு அண்ணன் இனி ஒன்றும் பதில் சொல்ல முடியாது என்ற முடிவுக்கு வந்தாள். மெளனம் நிலவியது. ஆனால் அது நீடித்திருக்கவில்லை. "ஆமாம், அவள் சொல்வதிலும் நியாயம் இருக்கிறது. போய்த் தொலைகிறான். ஏதாவது கொடுத்துத் தொலைப்போம்" என்று அவள் தந்தை பேசத் தொடங்கியது கேட்டு என்றுமில்லாத மகிழ்ச்சி அடைந்தாள். "என்னப்பா! நானா தர வேண்டாம் என்கிறேன். தாராளமாய்க் கொடுங்கள். இருப்பதை விற்று அவர் கையில் கொடுங்கள். தாராளமாகச் செலவு செய்யட்டும். அவர் வழிபடுகின்ற மோகினித் தெய்வங்களுக்கு அர்ச்சனை செய்யட்டும். நானா வேண்டாம் என்கிறேன். எப்படியாவது போங்கள்' என்று சொல்லி மீண்டும் கூடத்தைவிட்டு உள்ளறைக்குள் போய் விட்டான். r அவன் குறிப்பிட்ட மோகினித் தெய்வம் யாரென்று யாருக்கும் புலப்படவில்லை. அவன் சொல்லியதும் சரியாக விளங்கவில்லை. "என்ன அது அவன் சொல்கிறான். எனக்கும் ஒன்றும் விளங்க வில்லையே.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழுக்கு_நிலம்.pdf/112&oldid=898008" இலிருந்து மீள்விக்கப்பட்டது