பக்கம்:வழுக்கு நிலம்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழுக்கு நிலம் 9 111 "அதுதான் அவன் கோவில் குளங்களுக்குப் போவான். பூஜை வழிபாடு செய்வான். அது இவனுக்குப் பிடிக்கவில்லை. மாணிக்கம் இந்தப் புதியகட்சி. தெய்வமில்லை என்று பேசும் கட்சியைச் சேர்ந்தவன். அதனாலே அவன் தெய்வத்திற்குப் பூஜை செய்வது இவனுக்குப்பிடிக்கவில்லை. எல்லாம் கட்சி வேற்றுமை. அவ்வளவுதான். அப்படித்தான் அதற்குச் செலவு செய்தால் என்ன நாலு ஐந்துதானே செலவு செய்வான். அதற்குப் போய் இவன் அங்கலாய்க்கிறான்" என்று விளக்கம் சொல்ல ஆரம்பித்தாள் அவள் தாய். பார்வதிக்கு மனத்தில் ஒருவகைக் குழப்பம் உண்டாக ஆரம்பித்தது. அண்ணன் சுட்டிக் காட்டியது அவர் நடத்தையைத்தான் என்பதை அவளால் நன்றாக உணர முடித்தது. அப்படி உண்மையில் அவர் நடக்கிறாரா என்ற கேள்விக்குறி அவன் உள்ளத்தில் எழுந்தது. அதற்கு விடை தருவது போலக் கடந்த கால நிகழ்ச்சிகள் ஒன்று இரண்டு மீண்டும் அவள் உள்ளத்தில் உலவ ஆரம்பித்தன. "நான் எங்கே போகிறேன் என்று உனக்குச் சொல்ல முடியாது. அதைக் கேட்க உனக்கு உரிமை கிடையாது"- அந்தச் சொற்கள் பார்வதியின் காதில் ஒலிக்க ஆரம்பித்தன. சிவராமன் நேரம் கழித்து வந்த இரவுகள், அப்பொழுது, கண்ணாடியின்முன் தலைவாரிக்கொண்டு சென்ற காட்சிகள் இவையெல்லாம் மனக்கண் முன் வந்து நின்றன. அவர் பணத்திற்காகத் தன்னை அனுப்பியது பொய் என்று அவள் மனத்தில் ஒர் எண்ணம் உதித்தது. என்னை ஏதாவது சாக்கு போக்குச் சொல்லி அனுப்பத் தக்க காரணம் அவர் மனத்தில் பணமாகப் பட்டிருக்க வேண்டும். அப்படியானால் இப்பொழுது ஏன் என்னை அழைக்க வேண்டும்? அவர் யாருக்காவது அவசரமாகப் பணம் கொடுக்க வேண்டியிருக்கும். அவர் ஆடும் களியாட் டத்திற்கு நான் இப்படியும் அப்படியும் அகற்றி வைக்கப்படும் காயாக அமைந்துவிட்டேன். அவ்வளவுதானா என் நிலைமை. அப்படியிருந்தாலும் நான்தானே சென்று திருத்த வேண்டும். திருத்த வேண்டும். உண்மைதான். ஆனால் அவர் பாழாகுவதற்குப் பக்கத் துணையாக நான் இருக்க வேண்டுமா? அதற்குத் தக்க பண உதவி நான் செய்ய வேண்டுமா? கூடாது. அண்ணன் சொல்வது உண்மையாக இருந்தால் நான் கொடுக்கும் பணம் விழலுக்கு இறைக்கும் நீராகப் போகுமே. பணம் எல்லாம் ஒழிந்த பிறகு மட்டும் வாழ்வு சீர்படும் என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழுக்கு_நிலம்.pdf/113&oldid=898010" இலிருந்து மீள்விக்கப்பட்டது