பக்கம்:வழுக்கு நிலம்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 ( ரா. சீனிவாசன் எப்படிச் சொல்ல முடியும்? ஒரு வேளை அண்ணன் கோபத்தில் இப்படிச் சொல்லியிருப்பாரா? வீணாகச் செலவு செய்கிறார் என்ற வருத்ததில் வேகமாகச் சொல்லும் போது அப்படி வந்திருக்குமோ! அப்படிதான் அது உண்மையாக இருந்தாலும் அண்ணனுக்கு எப்படித் தெரிய முடியும்? யாராவது அண்ணனிடம் சொல்லியிருக்கக் கூடாதா! ஏன்.? சொல்லியும் இருக்கலாம். அவர்கள் சொன்னது தவறாகவும் இருக்கலாம். ஒரு வேளை அது உண்மையானால்...? இருக்காது. கேட்டு விடலாம். பணம் கொடுக்கத்தட்டிக் கழிப்பதற்கு இதுவும் ஒரு வழியாக இருக்கலாம். இது போன்ற எண்ணங்கள் பார்வதியின் மனத்தில் தோன்றி மறைந்தன. யாராவது தொடர்ந்து பேசியிருந்தால் இவ்வளவு எண்ணங்களும் தோன்றியிருக்க முடியாது. அவள் அப்பாவும், அம்மாவும் உட்கார்ந்துகொண்டிருந்தார்கள். இந்த அமைதி பார்வதியின் தாயாருக்குப் பிடிக்க வில்லை. "ஏன், உங்களைத்தானே. கல்லுப் பிள்ளையார் மாதிரி ஒன்றும் பேசாமல் இருக்கிறீர்களே. ஏதாவது முடிவு செய்து எழுதுங்களேன்." - "அதெல்லாம் முடியாது. மாணிக்கம் சொல்வதிலே கூட உண்மை இருக்கிறது. நெருப்பு இல்லாமல் புகை வராது. அப்படித்தான் கடன்காரர் வீட்டை வளைத்துக் கொண்டால் அதற்கு என் பணம்தானா பயன்பட வேண்டும்? அப்படித் தான் நான் ஏதாவது கொடுப்பதாய் இருந்தால் அதைத் தனிச் சொத்தாக வைத்தால் நாளைக்கு என்பேரு இருக்கும். பேரன் பேர்த்தி தலைமுறையாக இருக்கும்." "இதோ பாரு, இப்படி எல்லாம் திருப்பித் திருப்பிப் பேசாதீர்கள். அவனுக்குச் சொன்ன சொற்படி ஏதாவது கொடுத்து நம் மானத்தைக் காப்பாற்றுங்கள். நீங்கள் 'கொடுக்கிறேன் என்று சொல்லாவிட்டால் அவன் ஏன் கேட்கிறான். உங்கள் மேலே தவறு வைத்துக்கொண்டு அவன் மேலே தவறு காண்கிறீர்கள். இதற்கு மகன் வேறு பக்கத் துணை.” "சே, நீ சும்மா இரு உனக்கு என்ன தெரியும்? அதுவா விஷயம். கோவிலிலே பூஜை பண்ணுகிறான் என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழுக்கு_நிலம்.pdf/114&oldid=898012" இலிருந்து மீள்விக்கப்பட்டது