பக்கம்:வழுக்கு நிலம்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழுக்கு நிலம் 9 113 சொல்கிறானே அதை முதலிலே விளக்கிக் கொண்டு அப்புறம் பேசு. தெரியாத்தனமாய்ப் பேசுறே." "அம்மா! அவர் தவறான நடத்தையில் பொருளைச் செலவு செய்கிறாராம். அண்ணன் இப்படிச் சொல்கிறான்." "அப்படிச் சொல்லு! அவன் மேலே அபாண்டமான பழியைப் போட்டுத் தப்பித்துக் கொள்ளலாம் என்று நினைத்துச் சொன்னால் அதை அப்படியே நம்பி இந்த மனுஷன் வேறு ஆடுறாரு" என்று சொல்லிவிட்டு அதைத் தீர விசாரித்துத் தெரிந்து கொள்ள மாணிக்கத்தைக் கூப்பிட்டாள். "மாணிக்கம்! உன்னைத்தான் மோகினித் தெய்வம் பிடித்துக்கொண்டு அவள் சொல்லுகிறதை நீ கேட்டுக் கொண்டு ஆடுகிறாய். அதை விட்டுவிட்டு அவனைப் போய் மோகினித் தெய்வம் பிடித்து ஆட்டுகிறது. அவன் ஆடுகிறான் என்கிறாயே...உடன் பிறந்த தங்கைக்குக் கொடுக்க மனம் இல்லையானால் அவளை வைத்துக்கொண்டு இங்கே வாழவாவது உன்னால் முடியுமா? அப்படித்தான் காலத்துக் கும் வைத்துக்கொண்டு வாழ்ந்தால் உன்மோகினிதான் விடுவாளா உன்னை? இதெல்லாம் கொஞ்சம் கூடச் சிந்தித்துப் பார்க்காமல் வாயில் வந்தபடி பேசிவிட்டாய்” என்று கொஞ்சம் கூட யோசியாமல் வாயில் வந்தபடி பேசத் தொடங்கினாள். எங்கே மீனாட்சி இந்தச் சொற்களைக் கேட்டுவிடு கிறாளோ என்ற அச்சம் அவனுக்குத் தோன்றியது என்பது அவன் திரும்பிப் பார்த்த பார்வையிலிருந்து நன்கு தெரிந்தது. அதைப்பற்றிப் பார்வதியின் தாயார் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. அலட்சியமான பார்வையோடு மருமகள் இருந்த திக்கைப்பார்த்தாள். தாயைப்பற்றி நினைக்கும்போது அவனுக்கு அந்தச் சமயத்தில் தெருவில் அம்மன் கோயிலில் இருந்த காளியின் வடிவம் கவனத்திற்கு வந்தது. அஞ்சாமல் அலட்சியமாகப் பார்த்த அந்தப் பார்வையில் காளியின் கண்களைப்போல் தோற்றம் இருந்தது. மாணிக்கமும் சிறிது நடுங்கிவிட்டான். அவள் எங்கே அம்மா சொன்னதைக் கேட்டுவிடப் போகிறாளோ என்று சிறிது அஞ்சினான். அவன் குரலில் கொஞ்சம் தாழ்மை ஏற்பட்டது. "அம்மா! நீ இப்படிச் சீறி விழுவாய் என்று நான் எதிர் பார்க்கவில்லை. உண்மையைச் சொன்னால் உங்களுக்கு ஏன் உள்ளம் நோகிறது?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழுக்கு_நிலம்.pdf/115&oldid=898014" இலிருந்து மீள்விக்கப்பட்டது