பக்கம்:வழுக்கு நிலம்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 ) ரா. சீனிவாசன் "என்னடா, உண்மை? அதை சொல்லித் தொலை. யார் சொன்னது? என்ன விஷயம் சொல்லேன். உங்கள் அம்மாதான் கேட்கட்டும்" என்று இடையில் குறுக்கிட்டார். "யாரோ தெரியவில்லை. அவள் ஆபீசில் வேலை செய்கிறவளாகத்தான் இருக்க வேண்டும். அவளும் அவரும் சைனாபசாரில் சுற்றிக்கொண்டிருந்தார்கள். அவளை 'பஸ்ஸில் ஏற்றிவிட்டுப் பிறகுதான் அவர் பஸ்ஸில் ஏறினார். நான் முன்னால் பட்டணத்துக்குத் துணி வாங்கப் போனபோது இதைக்கண்டேன். கண்டுங் காணாததைப் போல நடந்துகொண்டேன். அதனால்தான் அவர் வீட்டுக்குப் போக மனம் இல்லை. பார்வதிக்குச் சொல்லக் கூடாது; சொன்னால் மனம் வருத்தப்படுவாளே என்று சொல்லாமல் இருந்தேன்" என்று அமைதியாகப் பற்றற்ற துறவிபோல நடந்த நிகழ்ச்சியைச் சொல்ல ஆரம்பித்தான். "சரிதான் போதும். இதுக்குமேலே பார்வதியை வைத்துக் கொண்டு அவன் வாழ்ந்தாற் போல்தான். கொடுக்கிற பணத்தைத் தாறுமாறாகச் செலவு செய்துவிட்டுப் பிறகு அவளை வைத்துக்கொண்டு அவன் வாழப்போவதில்லை” என்று மிகச் சுருக்கமாக முடிவு சொல்லப்பட்டது. கொஞ்ச நேரம் வருத்தம் கலந்த நிலைமையில் உட்கார்ந்து கொண்டிருந்தார்கள். "செங்கல்பட்டிலிருந்து கடிதம் வந்திருக்கிறது. மீனாட்சி யையும் அழைத்துப் போகிறேன். யாரோ எம்.எல்.ஏ. வைப் பார்த்து வேலைக்குச் சிபாரிசு செய்ய வேண்டுமாம். உடனே புறப்படும்படி எழுதியிருக்கிறது" என்று சொல்லிய வண்ணம் அந்த இடத்தை விட்டுத் தன் பயணத்துக்குச் சித்தமானான். "ஏதாவது பதில் எழுதுங்க, சும்மா இருந்தால் எப்படி.." "அதுதான் யோசிக்கிறேன். மருமகள் வீட்டில் இல்லை. இன்னும் ஒருமாதம் கழித்துப் பார்வதியை அனுப்பி விடுகிறேன் என்று எழுதலாமா என்று நினைக்கிறேன்." பார்வதிக்கு அப்பா சொல்வது கொஞ்சங்கூடப் பிடிக்காமல் இருந்தது. "அப்பா நீங்கள் எழுதவேண்டாம். நான் எழுதி விடுகிறேன். ஐந்தாயிரம் கிடையாது; விருப்பமிருந்தால் அழைத்துப் போங்கள் என்று எழுதுகிறேன். இனிமேல் நீங்கள் எனக்காகக் கொஞ்சங்கூடக் கவலைப்பட வேண்டியதில்லை. என்னைப்பற்றிச் சிந்திக்க வேண்டியதில்லை. எனக்காக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழுக்கு_நிலம்.pdf/116&oldid=898016" இலிருந்து மீள்விக்கப்பட்டது