பக்கம்:வழுக்கு நிலம்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழுக்கு நிலம் 115 இரக்கங் காட்ட வேண்டியதில்லை. எனக்காக ஒரு துளி கண்ணிர் யாரும் சிந்தவேண்டியதில்லை. இது செய்தால், போதும்" என்று விடு விடு என்று பேசத் தொடங்கினாள். அசையாத கல்லைப்போலவே அப்படியே இருவரும் உட்கார்ந் திருந்தார்கள். "அப்பா! போய் வருகிறேன்." "மாமி சீக்கிரம் வந்துவிடுகிறோம்." "போய் வருகிறேன்" என்ற இந்தச் சொற்களோடு வெளியே வந்து நின்றுகொண்டிருந்த ஒற்றை மாட்டு வண்டியில் பெட்டியும் ஒரு பையும் துணையாக இருவரும் ஏறி உட்கார்ந்து கொண்டார்கள். வண்டி புறப்பட்ட ஒலி கேட்டது. அமைதி நிலவியது. அதற்குமேல் அவர்கள் பேசுவதைப் பார்வதி கேட்க மனமில்லாமல் உள்ளறைக்குச் சென்று பழம் பாயைப் போட்டுப் படுத்துக்கொண்டு விக்கி விக்கி அழுத குரல் மட்டும் கேட்டது. சிவராமனைப் பிடித்த மோகினித் தெய்வத்தைப்பற்றி அவள்மனம் ஆராய்ச்சி செய்துகொண்டிருந்தது. 17 வெளியே தெருவில் அங்கொருவர் இங்கொருவராகப் போய்க்கொண்டிருந்தார்கள். சாவு விழுந்த வீட்டைப் பார்ப்பது போல் பழக்கமானவர்கள் சிவராமன் வீட்டைப் பார்த்துக்கொண்டு சென்றனர். அந்த வீட்டின் திண்ணையில் ஒருவன் உட்கார்ந்து கொண்டிருந்தான். குழி விழுந்த கண்கள், மெலிந்த உடல், அழுக்குப் படிந்த தலைப்பாகை ஒன்று மாட்டிக்கொண்டிருந்தான். அவனைப் பார்த்தவர்கள் அந்த வீட்டை ஒருமுறை பார்த்தார்கள். எல்லாம் விஷயம் தெரிந்தவர்கள் போல ஏதோ ஒருவரைப் பார்த்து ஒருவர் பேசிக் கொண்டிருந்தார்கள். "இவன் அப்பன் வயிற்றுக்குக் கூடச் சரியாகச் சாப்பிட மாட்டான். எப்படி எப்படியோ வயிற்றைக் கட்டி,வாயைக் கட்டி இந்த வீட்டைக் கட்டினான். ஒரே பிள்ளை என்று படிக்க வைத்தான். மகன் ஊதாரி, வீண் செலவாளி. எல்லா வற்றையும் அழித்து விட்டான்." என்றார் ஒருவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழுக்கு_நிலம்.pdf/117&oldid=898018" இலிருந்து மீள்விக்கப்பட்டது