பக்கம்:வழுக்கு நிலம்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 () ரா. சீனிவாசன் "இந்தப் பையன் சமுசாரம் கூட இவனோடு வாழ்வது இல்லையாம். அடித்துத் துரத்தி விட்டானாம்" என்றார் மற்றொருவர். "அப்பப்பா! இவன் பிடிக்கிற சிகரெட்டுக்கு அளவே கிடையாது. எப்பொழுது பார்த்தாலும் சிகரெட்டும் கையுமாகத்தான் இருப்பான். கொஞ்சம் ஆள்கூட ஷோக்காளி.” "என்ன இருந்தாலும் வாங்கின கடனைக் கொடுக்கவே மாட்டான். அவர்களைத் திருப்பியடிப்பான். இன்றைக்கு வா, நாளைக்கு வா என்று இழுத்தடிப்பான். அவனுங்கதான் எத்தனை நாளைக்குப் பொறுப்பானுங்க?" "என்னய்யா ஈட்டிக்காரன் கிட்டே கடன் வாங்கி எவன் யா முன்னுக்கு வர முடியும்...? அவன் கிட்டே கூட கடன் வாங்கியிருக்கிறானாம். அவன் வேறே இவனை விடாமல் அடிக்கடி சுற்றிக்கொண்டு இருக்கான்." "மன்னன் வட்டிக்கு அஞ்ச மாட்டான். எவ்வளவு கொடுப்பதற்கும் பின்வாங்க மாட்டான். பணம் கொடுத்தால் போதும்.” "ஆமாம். அதைத் திருப்பிக் கொடுப்பதாய் இருந்தால் தானே அஞ்ச வேண்டும்." "இந்த வீட்டை ரூபா மூவாயிரத்துக்கு அடமானம் வைத்தானாம். வைத்த பிறகு ஒரு மாத வட்டிகூடக் கொடுக்க வில்லையாம். எவன் தான்யா சும்மா இருப்பான்?" "ஆமாம். கடன்காரனும் கேட்டுப் பார்த்தானாம். இதோ வருது, அதோ வருது, மாமியார் வீட்டிலே தருகிறார்கள், அப்படி இப்படி என்று எவ்வளவோ சால் ஜாப்பு சொல்லி வந்திருக்கிறான். கடைசியிலே கடன்காரன் சும்மா விடுவானா?” "படித்தபிள்ளை. அப்பன் பேரைக் கெடுக்கப் பிறந்தான்.” "பாவம் ! அவனுக்கு உடன் பிறந்தாள் ஒருத்தி இருக்கிறாள். இவனுக்காக அவள், கட்டிக் கொடுத்த வீட்டுக்கும் போகாமல் இங்கேயே இருந்து எவ்வளவோ புத்தி சொல்லியிருக்கிறாள். கேட்டால்தானே! அய்யோ! அந்த அம்மாள் கதிகலங்கி நிற்கிறாள்.” "ப்ெபடிக் கூடவா நல்லாயிகர் டும்பம் அழியும்?” Lo– ந ருநத கு ավ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழுக்கு_நிலம்.pdf/118&oldid=898020" இலிருந்து மீள்விக்கப்பட்டது