பக்கம்:வழுக்கு நிலம்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழுக்கு நிலம் 9 117 'அப்பப்பா ! என்ன டாம்பீகமாகக் கல்யாணம் நடத்தினார்கள் தெரியுமா? கல்யாணம் ஆகி இரண்டு வருடம் கூட ஆகவில்லை." "என்ன இருந்தாலும் மன்னன் இதற்கெல்லாம் அஞ்ச மாட்டான். கவலைப்படவேமாட்டான். நாம்தான் இதைப் பற்றிப் பேசவேண்டும்.” இதைப்போன்ற காற்றிலே மிதக்கும் கவிதைகளை அந்தத் தெருவில் விஷயம் தெரிந்தவர்கள் புனைந்து கொண்டிருந்தார்கள். அதைக் கேட்டுக்கொண்டிருந்தவர்கள் "ஐயோ பரிதாபம்! என்று பாராட்டுரை வழங்கினார்கள். சிலர் தலையை மட்டும் அசைத்துக்கொண்டிருந்தார்கள். கையில் தமுக்கு வைத்திருந்தவன் ஒருவன் ஒரு பக்கமாக ஒதுங்கி நின்றான். சிவராமனின் தமக்கை சிவகாமி வெளியில் தலைகாட்டவில்லை. கதவைத்தாளிட்டுத் தூணின் மேல் சாய்ந்துகொண்டு, சிகரெட்டை ஒன்றன்பின் ஒன்றாகச் சங்கிலிபோலத் தொடர்ந்து ஓய்வில்லாமல் ஊதிக் கொண்டிருந்தான். "இந்த வீடு இந்த நிலைமைக்கு வரும் என்று நான் எதிர் பார்க்கவில்லை." "நீ எதிர்பாராதது. ஆனால் நான் எதிர்பார்த்தது நடந்து விட்டது. அதை எப்படி எதிர்பாராதது என்று சொல்ல முடியும்?” 'பேசக்கற்றுக் கொண்டாய்! வீட்டைக் குட்டிச் சுவராக்கி விட்டாய்." "இந்த வீடு இனிமேல்தான் சீர்பெறப் போகிறது. இதற்கு இனிமேல்தான் வெள்ளையடித்து, வர்ணம்பூசி போனது வந்தது பழுதுபார்த்துப் புத்தம் புதிதாக ஆகப்போகிறது. வாங்கினவன் சும்மா இருப்பானா? கடனை உடனே வாங்கி இந்த வீட்டைச் செப்பனிட்டு உடனே அவன் கடன்காரனா வான். இந்த வீடு சீர்படவில்லை, சீர்படவில்லை என்று பேசுகிறாயே, அப்புறம் வந்து பார். இந்த வீடு சீர்ஆகி இருக்கிறதா என்று." “சரிதான். இந்த வீட்டைத் தாரைவார்த்துவிட்டு அப்புறம் இது சீர்பட்டால் என்ன, குட்டிச்சுவர் ஆனால் எனக்கென்ன?” "அதுதான் கூடாது. நாம் கெட்டாலும் வீடு நன்றாக இருக்கவேண்டும். இந்த வீட்டில்தான் எங்கள் தாயும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழுக்கு_நிலம்.pdf/119&oldid=898022" இலிருந்து மீள்விக்கப்பட்டது