பக்கம்:வழுக்கு நிலம்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 ( ரா. சீனிவாசன் தந்தையும் இருந்து நல்லறம் ஆற்றினார்கள். இங்கேதான் நான் இருந்து வாழ்ந்து உள்ளதை எல்லாம் அழித்தேன். இங்கேதான் என் தமக்கை வந்து இந்தத் தூணில் சாய்ந்து கொண்டு கண்ணிர்விட்டாள் என்று சொல்லவாவது இந்த வீடு இடியாமல் குட்டிச்சுவராகாமல் எங்கள் சரித்திரத்தை எடுத்துச் சொல்ல வேண்டும். அப்படி ஒரு நல்ல வாழ்த்து வாழ்த்திவிட்டுப் போவதுதான் நல்லது.” "சரிதான். நீ வாழ்த்திக்கொண்டிரு. என்னைமட்டும் வண்டி ஏற்றி அனுப்பிவிடு. இந்த அவமானத்தைத் தாங்கிக் கொண்டு இங்கு இருக்கமுடியாது." "அக்கா! எனக்கு ஒரு பாட்டு ஞாபகம் வருகிறது. "ஆன முதலில் அதிகம் செலவானால் மானமழிந்து மதிகெட்டுப் - போனதிசை எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ்பிறப்பும் தீயனாய் நல்லார்க்கும் பொல்லனாம் நாடு." என்ன அழகான பாட்டு! இந்தப் பாட்டின் பொருளுரையை உணரும்போது இந்தப் பாட்டு எவ்வளவு சுவைக்கிறது தெரியுமா? "ஆமாம், சுவைக்கும்! எவனோ ஒருவன் ஊர் பற்றி எரியும்போது புல்லாங்குழல் ஊதினானாமே. அந்த மாதிரி இருக்கிறது உன் கதை." "அத்தகைய மனம்தான் வேண்டும். அழியட்டும் என் குடும்பம். அழியட்டும் என் பழைய வாழ்வு. மாறட்டும் ஒரு புதிய வாழ்வு. இந்த வீட்டோடு என் கடன் தொல்லை தீரட்டும். எத்தனை நாட்கள், எத்தனை இரவுகள் இந்தக் கடன் காரர்களுக்கு அஞ்சி அஞ்சி நான் வாழ முடியும். எத்தனை முறை அவர்களைக் கண்டு என் உள்ளம் நடுங்கியிருக்கிறது தெரியுமா? அட்டை போல் வட்டிக்கு வட்டி வாங்கி என் வாழ்வை உறிஞ்சியவர்கள் எத்தனையோ பேர். ஏதோ ஒரு முறை தவறு செய்தேன். அதற்குமேல் தலை தூக்கி வாழ முடியவில்லை. இந்த உலகம் என்னை யோக்யதை அற்றவன், நாணயம் அற்றவன் என்று கூறிப் பழிச்சொல் சொல்லிச் சொல்லிப் பழகி விட்டது. எதற்கும் ஒர் எல்லை உண்டு. அந்த எல்லைதான் இன்றைய ஏல விளம்பரம். இன்று தான் எனக்கு விடுதலை கிடைக்கும் நல்ல நாள். எதற்காகக் கவலைப்பட வேண்டும்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழுக்கு_நிலம்.pdf/120&oldid=898026" இலிருந்து மீள்விக்கப்பட்டது