பக்கம்:வழுக்கு நிலம்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழுக்கு நிலம் 19 "கட்டிய வீட்டைக் கடன்காரர்களுக்குக் கொட்டித் தொலைக்க எத்தனை நாள் காத்துக்கிடந்தாயோ தெரிய வில்லையே." "நான் காத்துக் கிடக்கவில்லை. அவன்தான் காத்துக் கிடந்தான் பகிரங்கமாக ஏலம் போட நான் என்ன செய்ய முடியும்? நீயும் கூடத்தானே இருந்தாய்! மாமனார் வீட்டில் பத்தாயிரம் கொடுப்பதாகச் சொன்னது உனக்குத் தெரியாதா? இப்படிக் காலை வாரி விடுவார்கள் என்று யார் எதிர்பார்த்தார்கள்?" "ஐந்தாயிரத்திற்காவது பதில் வந்ததா?” "அதுவும் வரவில்லை. ஐந்தாயிரம் கிடையாது. விருப்பம் இருந்தால் வந்து அழைத்துப் போகவும்" என்று அவளே எழுதி விட்டாள். அந்த மனுஷன் ஒரு சொல் கூடப் பதில் எழுதவில்லை." "சரியான சம்பந்தம். அப்பொழுதே எங்களவர் வேண்டாம் இந்த இடத்தில் சம்பந்தம் என்று சொல்லி வந்தார். கேட்டால்தானே.” "ஆமாம். நான்கூட அதுதான் சொல்கிறேன். இனிமேல் அவர்கள் சம்பந்தம் வேண்டாம். பெண்ணை வைத்து அவர் களே வாழட்டும். எனக்கு வேளைக்கேற்ற உணவு உண்டு; விரும்பித் தங்குவதற்கேற்ற விடுதி உண்டு; பார்ப்பதற்கேற்ற சினிமா உண்டு. உண்டு உண்டு என் பொழுது போக்குவதற்கு ஏற்ற சிகரெட்டுத் துண்டு" என்று சிகரெட்டுத் துண்டை வாயில் வைத்துக் கொண்டே கிளம்பினான். அந்தப் பிரியும் வீட்டை ஒரு முறை பார்த்தான். "அக்கா! உன் சொந்த சாமான்களை எல்லாம் தனியாக எடுத்து வைத்து விடு. உன்னை வண்டியில் ஏற்றி அனுப்பி விடுகிறேன். மற்ற சாமான்களை அவர்களிடத்தில் ஒப்பு வித்துவிட்டு விடுதலை கீதம் பாடி இந்த வீட்டைவிட்டு வெளியே போகப் போகிறேன்." சிவகாமி கண்கலங்கி நின்றாள். "இதற்குத்தானா நான் இத்தனை நாள் இந்த வீட்டில் இருந்தது? இந்தக் குடும்பம் பாழாகும் காட்சியைப் பார்ப்பதற்கா நான் இங்கு இருந்திருக்கவேண்டும்? எங்கே யாவது கண் மறைவாக பம்பாயில் இருந்தால் இந்தக் காட்சி களைக் காணவேண்டியிருக்காதே."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழுக்கு_நிலம்.pdf/121&oldid=898028" இலிருந்து மீள்விக்கப்பட்டது