பக்கம்:வழுக்கு நிலம்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 ரா. சீனிவாசன் "கேட்கவேண்டியிருக்கும். அவ்வளவுதான் வித்தியாசம். புறப்படு, வண்டி அழைத்து வந்துவிடுகிறேன். அதற்குள் எடுத்து வைத்துக்கொள். வீணாக மனத்தை அலட்டிக்கொள்ளாதே. பேசாமல் பம்பாய்க்குப் போய்ச் சேர். நான் நிம்மதியாக இருக்கிறேன் என்று அவரிடம் சொல். வேறு ஒன்றும் சொல்லி அவர் மனத்தைக் குழப்பாதே." சிவகாமி இருந்த இடத்தைவிட்டு எழுந்திருக்கவில்லை. சிவராமனே வலிய தன் தமக்கையின் துணிமணிகளை எடுத்து ஒரு பெட்டியில் வைத்தான். கவரின்மேல் மாட்டியிருந்த தன் அப்பா அம்மாவின் படத்தை எடுத்து அவள் பெட்டியில் வைத்தான். மற்றொரு பெட்டியில் தன் துணி சட்டைகளை மடித்து வைத்தான். ஷேவிங்' பெட்டி சிகரெட்டு டப்பா இவை போன்ற இன்னபிற அவன் இன்றியமையாப் பொருள்களை எடுத்து வைத்துக்கொண்டான். தன் போட்டோவையும் பார்வதியோடு இருந்த மற்றொன்றையும் எடுத்து வைத்துக் கொண்டான். எஞ்சி நின்ற பீரோ, கட்டில், வெள்ளி, பித்தளை பாத்திரங்களையெல்லாம் ஒரு பார்வை பார்த்துவிட்டு விடை பெற்றான். அதற்குள் வெளியே கதவு தட்டும் சப்தம் கேட்டது. வெளியே 'டாக்ஸி காரில் மூன்று பேர் வந்து இறங்கினார். போவதற்குத் தயாராக இருந்த காலி டாக்ஸியை இருக்குமாறு கை காட்டினான் சிவராமன். அவனும் சிவராமனின் வருகைக்காக நிறுத்தி வைத்தான். "நான்தான் அமீனா" என்று கையில் சில பழுப்பு நிறக் கடிதங்கள் வைத்துக்கொண்டிருந்த ஒருவர் தம்மை அறிமுகப் படுத்திக் கொண்டார். சிறுக வெட்டிய கிராப்பும் அதில் வெள்ளை மயிர்கள் ஆங்காங்கு ஊடுருவிப் பாய்ந்து வயது நாற்பது இருக்கும் என்று அறிமுகப்படுத்தியது அவர் தோற்றம். மற்றொருவர் இவன் வீட்டிற்கு வந்து போகும் பழக்கமான கடன்காரர் என்பது இவனுக்கு யாரும் சொல்லத் தேவையில்லை. வாய் மூடி மெளனியாக இருந்த அவரோடு இருந்த மற்றொருவர் வக்கீலாகத்தான் இருக்க வேண்டும் என்பதைச் சிவராமன் தெரிந்து கொண்டான். "சார்! உங்களுக்கு வருத்தமான செய்தி ஒன்று சொல்லப் போகிறேன்” என்று எடுத்தான் சிவராமன். "என்ன சார் செய்வது! படித்த நீங்களே இப்படிக் கவலைப் பட்டால் மற்றவர்கள் என்ன செய்வார்கள்! எல்லாம் சட்டப்படித்தான் நடக்கும்" என்று ஆறுதல் சொல்ல ஆரம்பித்தார் வக்கீல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழுக்கு_நிலம்.pdf/122&oldid=898030" இலிருந்து மீள்விக்கப்பட்டது