பக்கம்:வழுக்கு நிலம்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழுக்கு நிலம் 9 121 "ஆமாம் சார்! அதைத்தான் நானும் சொல்ல வந்தேன் சட்டப்படி நீங்கள் அடையப் போகிற வருத்தத்தைச் சுட்டிக் காட்ட ஆரம்பிக்கிறேன்." "στ6ύτ6ύτ Ρ "ஆமாம். நான் இன்சால்வென்ட் கடிதம் கோர்ட்டில் வாங்கியிருக்கிறேன். இந்த வீட்டில் உள்ள சாமான்களை நீங்களும் மற்றக் கடன்காரர்களும் சமபாகமாகப் பெற்று உள்ளதைக் கொண்டு திருப்தி அடைய வேண்டியது" என்று சொல்லிவிட்டுக் கையில் இருந்த கோர்ட்டுக் கடிதம் ஒன்றைக் காட்டினான். அதே சமயம் சைக்கிளில் இவனுக்குப் பழக்கமான ஈட்டிக்காரன் வந்து நின்றான். அவனுக்குப் பக்கத்துணையாகத் துணிக் கடைக்காரன், பால்காரன், இன்னும் சிவராமனுக்கு அறிமுகமான வியாபாரிகள், கைப்பதிலாகக் கடன் கொடுத்தவர்கள் இன்னும் எல்லாக் கடன்காரன்களும் வழியனுப்ப வந்தவர்கள் போல் வழியில் வந்து நின்றார்கள். ஆள் இன்சால்வெண்ட் ஆகிவிட்டான் என்ற செய்தி கேட்டு அவரவர் தங்களுக்குள் ஏதோ பேசிக் கொண்டிருந் தார்கள். சிவராமனிடம் யாரும் நெருங்கிப் பேச வரவில்லை. எடுத்து வைத்த இரண்டு பெட்டிகளையும் அமீனாவிடம் திறந்து காட்டினான். இவை என் சொந்த உபயோகத்திற்குரிய சாமான்கள். இவை என் தமக்கையின் சாமான்கள் என்று சொல்லிவிட்டு அப்பெட்டிகளை மூடினான். சிவகாமி கவிழ்த்த தலையை எடுக்காமல் இருந்தாள். கண்களிலிருந்த நீர் கன்னத்தைக் கனத்துக் கொண்டிருந்தது. "அக்கா! எழுந்திரு” என்று கூப்பிட்டான். கண்களைத் துடைத்துக் கொண்டாள். அந்த வீட்டை ஒருமுறை பார்த்தாள். அவளுடைய உள்ளத்தில் எவ்வளவோ எண்ணங்கள் பழையநினைவுகள் வேகமாக வரத்தொடங்கின. அவற்றைப்பற்றிச் சிந்திக்க நேரமில்லாமையால் அவை மொத்தமாகப் பாரமாகக் கிடந்தன. அந்த இடத்தைவிட்டு எழுந்தாள். அவளுக்குப் பழக்கமான அடுப்பங்கரையை ஒரு முறை பார்த்தான். சட்டி, பானைகள் கறுத்துக் காணப்பட்டன. சொட்டு சொட்டென்று சொட்டிக்கொண்டிருந்த குழாய் ஒன்றுதான் இவர்களுக்காகக் கண்ணிர் வடிப்பதைப் போல் இருந்தது. துடைப்பமும் பழைய முறமும் தனிமையை அனுபவித்தன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழுக்கு_நிலம்.pdf/123&oldid=898032" இலிருந்து மீள்விக்கப்பட்டது