பக்கம்:வழுக்கு நிலம்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 ரா. சீனிவாசன் இன்னும் இதைப் போன்ற காட்சிகளும் பேச்சுகளும் அவள் உள்ளத்தில் மாறிமாறி வந்து சுற்றிக்கொண்டிருந்தன. சன்னலருகில் வந்து நின்றாள். "அதோ பார்! விண்ணிலே நிலவு எவ்வளவு குளிர்ச்சியாக இருக்கிறது” என்று சுட்டிக்காட்டித் தான் சூட்டியிருந்த முல்லைப் பூக்களை முகர்ந்துகொண்டு அந்த வெண்ணிலாவிலே. அதற்குமேல் அவள் கற்பனை செல்லாமல் நின்றுவிட்டது. பத்தாயிரம்' என்ற சொற்களைச் சொல்லத் தொடங்கியது. பார்வதியை விட்டு அந்த வீடு பிரிவது போன்ற உணர்ச்சி அவளுக்குத் தோன்ற ஆரம்பித்தது. அடுப்பங்கரைக் குப் போய்த் திறந்திருந்த தவலையின் மீது தட்டு ஒன்று கொண்டு மூடினாள். அவள் கழுவி வைத்த கிண்ணங்கள் எல்லாம் பளிச்சென்று வெளுத்திருந்தன. அவை தன் நிலைமையைப் பார்த்துச் சிரிப்பது போன்றிருந்தன. அங்கே கவிழ்ந்திருந்த வெள்ளிச் சாமான்களும், 'எவர் சில்வர்' பாத்திரங்களும் "எங்களுக்கு இருக்கிற மதிப்புக்கூட உனக்கில்லையே! பெண்ணாகப் பிறந்தால் உள்ள மதிப்போடு பணமதிப்பும் சேர்ந்தால்தானே உனக்கு மதிப்பு” என்று சொல்வது போல இருந்தது. அந்த வெள்ளிச் சாமான்கள் பீரோ கட்டில் இவை யெல்லாம் தான் வரும்பொழுது உடன் வந்தது அவள் கவனத்துக்கு வந்தது. இவையெல்லாம் சீர் என்ற பெயரால் அங்கே சீர் பெற்று இருந்தன. ஆனால் தன் வாழ்வு மட்டும் சீர் பெறவில்லையே என்ற எண்ணம் அவளுக்கு வருத்தம் தந்தது. சுவரில் மாட்டியிருந்த கடிகாரம் ஒலித்துக்கொண்டே இருந்தது. தனக்குப் பழக்கமான அந்தக் கருப்புப் பூனை ஒரு எலியைக் கண்டு விட்டது. அதையே பார்த்துக் கொண்டு ஒரமாக ஒதுங்கி உட்கார்ந்து கொண்டிருந்தது. கடிகாரம் மணி ஒன்று அடித்தது. கதவு தட்டும் சப்தமும் கேட்க ஆரம்பித்தது. அந்த நேரத்தில் அவர் குரல்தானா என்று கேட்டுக்கொண்டு கதவு திறக்கவேண்டும் என்பதற்காகக் கதவருகில் வந்து சிறிது நேரம் தயங்கினாள். "யாரது” என்று தன் மெல்லிய குரலில் சிறிது உரத்துக் கேட்டாள். "நான்தான் திற” என்று பதில் வந்தது. சிவராமன் வீட்டிற்குள் நுழைந்ததும் கதவை அவனே தாளிட்டான். "இவ்வளவு நேரம் பொறுத்து வருகிறீர்களே! எங்கே போய் வருகிறீர்கள்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழுக்கு_நிலம்.pdf/12&oldid=898024" இலிருந்து மீள்விக்கப்பட்டது