பக்கம்:வழுக்கு நிலம்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழுக்கு நிலம் 9 11 "இந்தக் கேள்வியைக் கேட்க உரிமை இனி உனக்குக் கிடையாது.” வாய் திறவாமல் படுக்கச் சென்றுவிட்டாள். சிவராமன் மட்டும் சிறிதுநேரம் ஏதோ சிறிய புத்தகம் ஒன்றைப் புரட்டிக்கொண்டு இருந்தான். கையில் ஒரு பென்சில் வைத்துக்கொண்டு ஏதோ குறித்துக் கொண்டிருந்தான். அதைப் பார்ப்பதும் ஏதோ குறித்துக் கொள்பவனாகவும் இருந்தான். ஆழ்ந்த சிந்தனையில் ஆழ்ந்தவனைப் போல் அதையே பார்த்துக்கொண்டு அவ்வப்பொழுது அதில் ஏதோ கோடு போட்டுக் கொண்டிருந்தான், விளக்கிலிருந்த எண்ணெய் குறைந்து விட்டதால் சிறிது குதித்து ஆடி அடங்கிவிட்டது. உள்ளிருந்த எலி எப்படியோ அந்தப் பூனையின் கண்களுக்குப் பட்டுவிட்டது. சட்டென்று பாய்ந்து அதை அப்படியே கவ்விக்கொண்டு சன்னல் வழியாக அந்தப் பூனை மெல்ல நடந்து வெளியே சென்றது. விளக்கு அணைந்தது. இருள் சூழ்ந்தது. காலையில் வழக்கம் போல் பார்வதி தன் கடமைகளைச் செய்யத் தொடங்கினாள். ஒரு தட்டில் நான்கைந்து இட்டளிகளும் சிறு கிண்ணத்தில் சட்டினியும் கொண்டு வந்து வைத்தாள். ஒன்றும் பேசாமல் மெளனமாக இருந்த சிவராமனின் முன்னால் மெளனத்தைக் கலைப்ப தற்காக "சாப்பிடுங்கள்" என்று சொல்லி அந்தத் தட்டை வைத்தாள். "வேண்டாம், நீ சாப்பிடு. சாப்பிட்டுவிட்டு உங்கள் வீட்டுக்குப் புறப்படு.” "எங்கள் வீட்டில்தான் நான் இருக்கிறேன்." "உங்கப்பனுக்குக் கடிதம் எழுதி உன்னை அழைத்துப் போகச் சொல். அவன் எப்பொழுது பத்தாயிரம் கொண்டு வந்து தருகிறானோ அப்பொழுதுதான் நீ இங்கே" "அடியெடுத்து வைக்க வேண்டும். அவன் இவன் என்று மரியாதை யில்லாமல் பேசவேண்டாம். என்னை என்ன வேண்டுமானாலும் சொல்லுங்கள். அவரைச் சொல்ல."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழுக்கு_நிலம்.pdf/13&oldid=898046" இலிருந்து மீள்விக்கப்பட்டது