பக்கம்:வழுக்கு நிலம்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 ரா. சீனிவாசன் "எனக்கு உரிமை கிடையாது. ஆமாம். அன்று எங்கள் வீடேறித் திருமணப் பேச்சை எடுத்துப் பேசியது யார்? ஏன் அப்பொழுது பத்தாயிரம் தருகிறேன் என்று சொல்ல வேண்டும்? வேறு எந்த இடத்திலும் கிடைக்காமலா உங்களிடத்தில் பெண் கேட்க வந்தோம்? சொன்ன சொல்லைக் காப்பாற்ற வேண்டுவது யோக்கிய முள்ளவர் களுக்குக் கடமையாகும். இதையாவது உணர்த்த நீ உன் தாய் வீட்டிற்குப் போய்த்தான் தீர வேண்டும். நான் படித்ததால் ஏற்பட்ட கடன் போதாதென்று கலியாணத்துக்கு ஏற்பட்ட கடன் எல்லாம் என்னால் கொடுக்க முடியாது. முதலில் பணம், பிறகுதான் வாழ்க்கை, பணமில்லாமல் வாழ முடியாது. பெரிய இடம் என்று நம்பி ஆடம்பரமாகக் கலியாணம் செய்தேன். அந்தக் கடன்காரர்களுக்கெல்லாம் நான் பதில் சொல்லிக் கொண்டிருக்க முடியாது. முதலில் உன்னை அழைத்துப் போகச் சொல்லிக் கடிதம் எழுது. பிறகு பேசலாம்” என்று சொல்லி விட்டுச் சாய்வு நாற்காலியில் சாய்ந்து கொண்டு செய்தித்தாள் தான் படிக்கத் தொடங்கினான். வெளியே 'டாக்ஸி வண்டி வந்து நின்ற சப்தம் கேட்டுப் பத்திரிகையைக் கீழே வைத்துச் சாய்வு நாற்காலியை விட்டு எழுந்து வெளியே வந்தான். பார்வதிக்குத் தன் தந்தை வந்து விட்டார் என்ற மகிழ்ச்சி ஒருபுறம்; அந்தச் சமயத்தில் இவர் ஏதாவது முரட்டுத்தனமாகப் பேசிவிட்டால் என்ன செய்வது என்ற கவலை மற்றொருபுறம். அதனால் அவளும் வெளிப் புறத்தில் விரைந்து வந்து நின்றாள். "வா அக்கா! இப்பொழுதான் வருகிறாயா! அவர் வரவில்லையா?" என்று தனியே வந்து இறங்கிய தன் தமக்கையை மிகவும் ஆவலாகச் சென்று வரவேற்றான். "இல்லை. அவரை பம்பாய்க்கு மாற்றிவிட்டார்கள்" என்று சொல்லிக்கொண்டே தன் கையிலிருந்த பையிலிருந்து டாக்ஸிக்குச் சில்லரை எடுத்துக் கொடுத்தாள். முற்றம் பெருக்கிக் கொண்டிருந்த வேலைக்காரி பெட்டியும் படுக்கையும் கொண்டுவந்து வைத்தாள். வீட்டில் மறுபடியும் கலகலப்பு ஏற்பட்டது. அந்த இட்டளித் தட்டைக் கொண்டுவந்து பார்வதி அந்த அம்மையாரின் முன்னால் வைத்தாள். "அக்கா! சாப்பிடுங்கள்.” "தம்பிக்குக் கொண்டுவந்து வை."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழுக்கு_நிலம்.pdf/14&oldid=898067" இலிருந்து மீள்விக்கப்பட்டது