பக்கம்:வழுக்கு நிலம்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழுக்கு நிலம் 9 13 மறுபடியும் மற்றொரு தட்டில் இட்டளி கொண்டு வந்து வைத்தாள். அவனும் ஒன்றும் மறுக்காமல் சாப்பிடத் தொடங்கினான். "அக்கா! மாற்றலைப்பற்றி அத்தான் ஒரு கடிதமும் எழுதவில்லையே!” 'திடீரென்று மாற்றி விட்டார்கள். அரசாங்கம் இன்ஷ்யூரன்ஸ் திட்டத்தை ஏற்றுக்கொண்டதால் தலைமைக் காரியாலயத்தில் வேலை அதிகமாம். அதற்குத்தான் அவரை மாற்றிவிட்டார்கள்.” "அங்கே நிரம்ப செலவாகுமே.” "வீடு கிடைப்பதுகூட கஷ்டம் என்று சொல்கிறார். சில மாதங்கள் முடிந்ததும் மாற்றிக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையோடு தான் போயிருக்கிறார்.” கூடத்திலிருந்த புதிய கண்ணாடி பீரோ தென்பட்டது. "இது மிகவும் நன்றாக இருக்கிறது. புதிய அமைப்பாகவும் இருக்கிறது” என்று சொல்லிக்கொண்டே கை கழுவ எழுந்தாள். "அக்காவுக்குக் காப்பி கொண்டுவந்து கொடு.” பார்வதி இரண்டு வெள்ளிக் குவளைகளில் காப்பி கொண்டு வந்து வைத்தாள். "இந்த வெள்ளிக் குவளையும் பார்வதி கொண்டு வந்ததுதானே!" "ஆமாம்" என்று மிகச் சுருக்கமாகச் சொல்லி முடித்தான். "காப்பியில் சர்க்கரை அதிகம்" என்று அவன் தமக்கை சொல்லிக்கொண்டே குடிக்க ஆரம்பித்தாள். கடிகாரம் ஒன்பது மணி அடித்தது. சிதறிக் கிடந்த பத்திரிகைத் தாள்களை அடுக்கி வைத்தான். பீரோவைத் திறந்து அதில் நலுங்காமல் இருந்த கோட்டும் சட்டையும் கால்சட்டையும் எடுத்துப் பக்கத்திலிருந்த மேசைமீது வைத்தான். அவன் குடிக்காமல் வைத்துவிட்டுப் போன காப்பி குவளையைக் கொண்டுவந்து பார்வதி கொடுத்தாள். "எடுத்துக் கொண்டு போய்க் கொட்டு. எனக்கு வேண்டாம். அக்கா வந்தவுடன் அவர்களுக்கு ஏன் நம் வீட் நிலைமை தெரியவேண்டும் என்று அடங்கிவிட்டேன்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழுக்கு_நிலம்.pdf/15&oldid=898089" இலிருந்து மீள்விக்கப்பட்டது