பக்கம்:வழுக்கு நிலம்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 ல் ரா. சீனிவாசன் ஆரவாரமும் நிரம்பின. கொண்டுவந்திருந்த பலகாரங்களை யெல்லாம் மீனாட்சி ஒரு புறம் அறையில் கொண்டு போய் வைத்தாள். அக்கம் பக்கத்தவரின் மதிப்பைப் பெறுவதற்காக அவற்றையெல்லாம் பங்கிட்டு வெற்றிலை பாக்குடன் ஒவ்வொரு வீட்டிற்கும் கொடுத்தனுப்பத் தட்டில் எடுத்து வைத்தாள் அண்ணி. "பார்வதி! இதைக் கொஞ்சம் கொண்டு போய்க் கொடுத்து விடேன்." பார்வதிக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. போகின்ற வீடு தோறும், "ஏன் பார்வதி! இன்னும் புக்ககம் புகவில்லை" என்ற அந்தச் சொற்கள் காதில் ஒலிக்கத் தொடங்கின. ஆகையால் சிறிது தயங்கினாள். "ஒன்றும் குறைந்துவிட மாட்டாய், கொண்டு போய்க் கொடுத்தால்" என்று வெடுக்கென்று பேசினாள். மறுபடியும் அந்த இடத்தில் இருக்க அவளுக்குப் பிடிக்கவில்லை. நல்ல காலமாக, "பார்வதி!' என்று அவள்தாய் கூப்பிட்ட குரல் அவளுக்கு அபயம் அளித்தது. "அம்மா கூப்பிடுகிறார்கள்" என்று சொல்லிக் கொண்டு அந்த இடத்தைவிட்டு வெளியேறினாள். அதற்குள் வீடு பெருக்க வந்த வேலைக்காரி அந்த அறையுள் வந்தாள். "மரகதம்! இங்கே வா! இதை நான் கொடுத்தேன் என்று எதிர் வீட்டுக்கும் பக்கத்து வீட்டுக்கும் கொடுத்துவிட்டு வா." "நீங்கள் கொடுத்தனுப்பக் கூடாது அம்மா. உங்கள் மாமியார்தான் வீட்டுக்கு வீடு கொடுத்தனுப்ப வேண்டும். அதுதான் மரியாதை." "ஆமாம். அவர்களுக்கு மரியாதை என்ன தெரியப் போகிறது. இங்கே வைத்தால் பாதி அவர்கள்தான் சாப்பிடுவார்கள். பாதிகூட வெளியாருக்குக் கொடுக்க மாட்டார்கள்.” இந்தச் சொற்கள் ஒன்றும் பாதியுமாக அவள் மாமியாருக்குக் கேட்க ஆரம்பித்தது. அவளால் பொறுக்க முடியவில்லை. இருந்தாலும் வந்த கோபத்தை அடக்கிக் கொண்டாள். நேரே உள்ளே வந்தாள். "மரகதம்! இந்தப் பலகாரங்களை ஒன்றுகூட இங்கே வைக்காமல் ஒவ்வொரு வீட்டுக்கும் பங்கிடச் சொல்லு" என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழுக்கு_நிலம்.pdf/126&oldid=898038" இலிருந்து மீள்விக்கப்பட்டது