பக்கம்:வழுக்கு நிலம்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழுக்கு நிலம் 9 125 விறுவிறுப்பாகச் சொல்லிவிட்டு அந்தத் தட்டுகளை எடுத்துக் கொண்டு போகும்படி உத்தரவு இட்டாள். "மாமியார் அதிகாரம் எல்லாம் இங்கே செல்லாது என்று சொல்லி வை. மரகதம்! உன்கிட்டேதான் சொல்லுகிறேன். என்ன. தெரியுதா?” "அந்த அதிகாரத்தை எல்லாம் அங்கேயே அடக்கி வைக்கச் சொல்லு முதலில் போகப் போக எங்களை இங்கே வைக்கக்கூட மாட்டார்கள் போலிருக்கிறதே.” 'பிடிக்காவிட்டால் வீட்டை விட்டுப் போறது. வாழாவெட்டி மகள் ஒருத்தியை வைத்துக் கொண்டு ஜம்பம் பேசுகிறாள். இவளுக்கும் இவள் மகளுக்கும் உழைக்கத்தான் சரியா இருக்கிறது இந்த வீட்டிலே." "கேட்டியா அவள் துடுக்குத்தனத்தை எல்லாம் அவன் கொடுக்கிற செல்லம்தான். அவள் இதுவும் பேசுவாள், இன்னமும் பேசுவாள். எதைத்தான் பேசமாட்டாள்! நாங்கள் ஏன் இந்த வீட்டை விட்டுப் போகணும்? பிடிக்காவிட்டால் அவள் புருஷனை அழைத்துக் கொண்டு தனியாய்ப் போகச் சொல்லு, என்ன குத்து உலக்கையாட்டம் நிற்கிறே. சொல்லேண்டி மரகதம் அவளிடம்.” "என்ன சொல்வது? இன்று அனுப்பச் சொல்லு உடனே போகிறேன். இவளுக்கும் இவள் மகளுக்கும் வேளா வேளைக்கும் வடித்துக் கொட்டுகிறேனே, சாப்பிட்டு விட்டு இதுவும் பேசுவார்கள் இன்னமும் பேசுவார்கள். இதோ மூட்டை கட்டுகிறேன். அவர்கள் நிம்மதியாக வாழட்டும்" என்று சொல்லிக் கொண்டுவந்த மூட்டையை எடுத்துக் கட்டினாள். பெட்டியை எடுத்து வைத்தாள். "ஆமாம் இவள் எடு என்றால் அவன் பிடி என்கிறான். இவள் ஆட்டி வைத்தால் அவன் ஆடுகிறான். அந்தத் தைரியத்திலேதான் அவள் இப்படிப் பேசுகிறாள். இந்த மனுஷனுக்குப் புத்தி இருந்தால் இப்படி எல்லாவற்றையும் மகன் கலியாணத்திற்குச் செலவு செய்துவிட்டு நடுத்தெரு சந்தி சிரிக்க வைப் பாரா ?” என்று அங்கலாய்த்துக் கொண்டிருந்தாள். இந்தச் சண்டையைக் கேட்டுக்கொண்டிருந்த பார்வதி அம்மாவைக் கையைப் பிடித்து இழுத்துக் கூடத்திற்கு அழைத்துச் சென்றாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழுக்கு_நிலம்.pdf/127&oldid=898040" இலிருந்து மீள்விக்கப்பட்டது