பக்கம்:வழுக்கு நிலம்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 ரா. சீனிவாசன் மீனாட்சி பரபரப்பாகச் சாமான்களையெல்லாம் எடுத்து வைத்துக்கொண்டு புறப்படத் தயாரானாள். "அவள் கிடக்கிறாள். அவளுக்கு நான் இங்கே அடங்கி ஒடுங்கிக் கிடப்பேனா? உன்னைக் கண்ணால் பார்க்க மாட்டேன் என்கிறாள். அவளுக்கென்ன மட்டுமரியாதை' என்று தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தாள் அவள்தாய். அப்பொழுது தான் அமைதியாக அப்பனும் மகனும் பேசிக் கொண்டே வீட்டுக்குள் நுழைந்தார்கள். "அப்புறம்.அந்த எம்.எல்.ஏ. என்ன சொன்னார்?" "அதெல்லாம் இப்பொழுது இவரை மதிக்கிறது இல்லை. தேர்தலுக்கு முன்னெல்லாம் அவர்கள் இவர்களைத் தேடி வந்தார்களாம். இப்பொழுது இவர்கள் அவர்களைத் தேடிப் போகிறார்கள். அவ்வளவுதான் வித்தியாசம்." "போனகாரியம் காயா பழமா?" "எம்.எல்.ஏ. சிபாரிசு எல்லாம் இப்பொழுது எடுபடுவதில்லையாம். பேசாமல் வந்து சேர்ந்துவிடச் சொல்கிறாரு விட்டோடு இருக்கச் சொன்னார். உத்தியோகம் எதற்கு என்று சொல்கிறார்." "அதற்குத்தானா உன்னைப் படிக்க வைத்தது?” "அதற்கு நான் என்ன செய்யமுடியும். நிலபுலன்களைப் பார்த்துக்கொள்வதற்கு அவருக்குப்பிறகு ஆள் இல்லையாம். அங்கேயே வந்துவிடச் சொல்கிறார்." "அதெல்லாம் முடியாது என்று தெளிவாகச் சொல்லி விட்டாயா?” "அதெப்படியப்பா சொல்லமுடியும்? அங்கே அந்த மாதிரி பேச முடியுமா? பெரிய வீட்டில் விரோதம் செய்து கொள்ளலாமா?" "என்னடா அது. எங்கள் கதி?” "அதுக்குத்தான் எதுவும் சொல்லாமல் வந்து விட்டேன். அதுக்கென்ன மெல்ல பார்த்துக் கொள்ளலாம் என்று வந்து விட்டேன்." அவர்கள் பேசும் பேச்சுக் கூடத்தில் உட்கார்ந்த பிறகும் தொடர்ந்து கொண்டிருந்தது. "ஆமாம். எல்லாம் பேசிக்கொண்டுதான் வந்திருக் கிறார்கள்" என்று குறுக்கிட்டாள் பார்வதியின் தாயார். "ஆமாம். பேசாமல் வருவார்களா? அவர்கள் எப்படி யாவது வருகிறார்கள். உனக்கு என்ன?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழுக்கு_நிலம்.pdf/128&oldid=898042" இலிருந்து மீள்விக்கப்பட்டது