பக்கம்:வழுக்கு நிலம்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழுக்கு நிலம் 9 127 "ஆமாம். எனக்கென்ன..! அதோ உங்கள் மருமகள் மூட்டை கட்டி வைத்துக்கொண்டாள். இவனும் அவள் பின்னாலேயே போகப்போகிறான். அப்புறம் எனக்கு என்ன என்று கேட்பீர்கள்." மாணிக்கத்திற்கு ஒன்றும் விளங்கவில்லை. நேரே மீனாட்சி இருந்த அறைக்குப் போனான். அவள் கொண்டு வந்த பலகாரங்கள் எல்லாம் சிதறிக்கிடந்தன. பெட்டியும் மூட்டையும் மீண்டும் கட்டிவைக்கப் பெற்றிருந்தன. "என்ன மீனா!" "இந்தவீட்டில் அரைகூடிணம் கூட இருக்கமூடியாது. என்னை உயிரோடு பார்க்கவேண்டுமானால் முதலில் என்னை என் அப்பா வீட்டிற்கு அழைத்துப் போகவேண்டும். இல்லா விட்டால், அவரை வந்து அழைத்துப் போகும்படி தந்தி கொடுக்கவேண்டும்.” "என்ன நடந்தது மீனா?” "நடந்தது நடக்கவேண்டியது. இந்த வீட்டில், மருமகளை வைத்து வாழ மனமில்லாதவர்கள் வீட்டில் நான் இருக்க முடியாது. வேலைக்காரி முன்னால் அவமானமாகப் பேசிய பிறகு ஒரு நிமிடம் இந்த வீட்டில் எப்படி இருக்க முடியும்? நாளைக்கு அந்த வேலைக்காரி என்ன மதிப்பாள்? நாலுபேர் கிட்டே அவள் என்னைப்பற்றிப் பேசினால் யாருக்கு அவமானம் ? நான் சொல்லிக்கொடுத்து நீங்கள் மாறி வீட்டீர்களாம். நான் ஆட்டிவைக்கிறேனாம். நீங்கள் ஆடுகிறீர்களாம் நான் இந்த வீட்டைவிட்டுப் போக வேண்டுமாம். உங்களை அழைத்துக்கொண்டு தனிக் குடித்தனம் நடத்த வேண்டுமாம். உங்களைச்சொல்லி என்ன பலன். எல்லாம் என் தலைவிதி, எங்கள் அப்பாவிடம் அப்போதே கலியாணமே.” "ஆமாம், நீ வேண்டாம் என்றாய். அவர் வேண்டும் என்றார். எல்லாரும் வேண்டாம் என்று சொல்லித்தான் பிறகு வேண்டும் என்று கலியாணம் செய்துகொள்வது. அதைப்பற்றி என்ன ஆராய்ச்சி இப்பொழுது?" "முதலிலே வண்டியைக் கூப்பிடுங்கள். நான் இங்கே இருக்கவே முடியாது." "மீனா! அவசரப்படாதே. கொஞ்சம் பொறுத்துக் கொள். என் பேச்சைக்கேள். இந்தத் தடவைமட்டும் பொறுத்துக்கொள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழுக்கு_நிலம்.pdf/129&oldid=898044" இலிருந்து மீள்விக்கப்பட்டது