பக்கம்:வழுக்கு நிலம்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 ( ரா. சீனிவாசன் பிறகு உனக்கு விரோதமாக இந்த வீட்டில் எதுவும் நடக்காதபடி நான் பார்த்துக்கொள்கிறேன்." "ஆமாம். உங்களுக்காகத்தான் நான் இதுவரை அடங்கி இருந்தது. இல்லாவிட்டால் இந்தத் தெரு சந்தி சிரித்து இருக்கும். நான் கொண்டுவந்த பலகாரங்களைத் தெருவில் கொண்டுபோடு, இங்கே ஒன்றுகூட வைக்காதே என்று சொன்னால் எனக்கு எப்படி இருக்கும். என்னைச் சொல்லட்டும். நான்பொறுத்துக் கொள்கிறேன். நான் கொண்டு வந்த பலகாரத்தின்மீது ஏன் கடிந்து கொள்ள வேண்டும்? அப்போது எங்கள் அப்பா அம்மாவை அவமதித்தது போலத்தானே ஆகிறது.” "மீனா! அப்படியெல்லாம் ஒன்றும் சொல்லியிருக்க மாட்டார்கள். நீ தப்பாக அர்த்தம் செய்து கொண்டாய்." "ஆமாம். அவர்கள் பேசுவது ஆங்கிலம். அதற்கு அர்த்தம் தெரியாமல் தப்பாக அர்த்தம் செய்து கொண்டேன்." மாணிக்கம் அந்தப் பெட்டியையும் மூட்டையையும் எடுத்து வைத்தான். அவள் சமாதானம் அடைந்தாளா இல்லையா என்று சொல்ல முடியாத நிலையில் அந்த இடத்தைவிட்டு எழவில்லை. அங்கேயிருந்த பலகாரங்கள் மீது அவள் கோபத்தைக் காட்டினாள். அவை இருந்த தட்டுகள் குப்புறக் கவிழ்ந்து லட்டுகள் பந்துபோல் உருண்டு பெரிய பெட்டிகளின் அடியில் அடைக்கலம் புகுந்தன. அவற்றையெல்லாம் தேடிப் பிடித்துத் தட்டில் வைக்கத் தொடங்கினான். அவற்றைச் சமாதானப்படுத்தி உருண்டு போகாமல் ஒரு நிலையில் வைத்து வெளியே வந்தான். "என்ன இருந்தாலும் அவள் நம்ம மருமகள். அவள் கூட சண்டைபோட்டால் நமக்குத்தானே அவமானம். தெரியாத் தனமாகப் பேசிவிட்டால் நாம்தான் சரிப்படுத்திக் கொண்டு போகணும். நம் கண்ணை நாமே குத்திக் கொண்டால் நமக்குத் தானே கஷ்டம்." "ஆமாம், கஷ்டம். பார்வதி வாழ்ந்தால் இவளுக்கென்ன, வாழா வெட்டியாக இருந்தால் இவளுக்கு என்ன இவளா அவள் தாயார் வீட்டிலிருந்து கொண்டு வந்து போடுகிறாள். அதுதான் எனக்குப் பொறுக்கவில்லை. அவள் அதை அடிக்கடி சுட்டிக் காட்டிப் பேசுவதை நான் பொறுக்க முடியாது." "அவன்வேறே போகிறேன் என்கிறான். மாமனார் வீட்டிலே சேர்ந்து விடுகிறேன் என்று சொல்லுகிறான். நீ வேறு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழுக்கு_நிலம்.pdf/130&oldid=898049" இலிருந்து மீள்விக்கப்பட்டது