பக்கம்:வழுக்கு நிலம்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழுக்கு நிலம் 9 129 மருமகளிடம் சண்டை போடுகிறாய். நல்லா இருக்குது. இந்தக் குடும்பம் சீர்பட்டால் போலத்தான்." "பிறந்த வீட்டில் பெற்ற மகள் கண்ணிர் சிந்தினால் இந்த வீடு சீர் பெற்ற மாதிரிதான்." "அம்மா! நீங்கள் எனக்காகப் பேசவும் வேண்டாம். வீட்டில் சமாதானம் கெடவும் வேண்டாம்" என்று இடை மறித்தாள் பார்வதி. "அம்மா! அவள் தான் புத்தியில்லாமல் பேசினால் நீயாவது அடங்கி இருக்கக் கூடாதா?" என்று தாழ்ந்த குரலில் பேசத் தொடங்கினான். "ஆமாம். அடங்கியிருக்க வேண்டியதுதான். அல்லி அர சாட்சியிலே எல்லோரும் அடங்கியிருக்க வேண்டியதுதான். அவள் கொண்டுவந்த பலகாரத்தை நாங்கள் எல்லோரும் சாப்பிட்டு விடுகிறோமாம். அப்படியானால் ஏன் அவள் கொண்டுவர வேண்டும்? எங்களை இப்படிக் குறைவுபடப் பேசவேண்டும்.” “என்னமோ, ஆனது ஆகி விட்டது. இனிமேல் அதெல்லாம் மறந்து விடுங்கள்" என்று மீணடும் அமைதியை நிலைநாட்ட முயற்சித்தான். "ஆமாம், மறப்போம். இந்த உயிர் இந்த உடலைவிட்டு மறைகிற வரையும் மறக்க முடியாது. நீ அவள் பக்கம் பேசாமல் எங்கள் பக்கமா பேசுவாய்? அவள் பேச்சைக்கேட்டு நீ ஆடாமல் வேறு என்ன செய்ய முடியும்? பெரிய வீட்டுப்பெண். அவளுக்கு அடங்கி வாழாமல் வேறு எப்படி நீ வாழ முடியும்? நான் அப்பவே சொன்னேன். அடக்கமா நம்ம நிலைக்கு ஏற்றபடி நமக்குக் கீழான இடத்திலே சம்பந்தம் செய்து கொண்டால்தான் அவள் அடக்கமா ஒடுக்கமா இருப்பாள்; மாமியார் ஆச்சே, நாத்தனார் ஆச்சே என்ற மரியாதை கொடுப்பாள். கேட்டால் தானே, இந்த மனுஷன். இப்பொழுது படுவது யார்? அவரா? நாங்களா? "ஆமாம். உனக்கு அடக்கமா, ஏழையா, நாட்டுப் புறமா பார்த்து ஒன்று கட்டிக் கொண்டால் நீ அவளை ஆட்டிப் படைக்கலாம். வீண் கதை எதுக்கு ? வந்த மருமகளைச் சீராக வைத்து வாழக் கற்றுக்கொள். அது போதும்.” "ஆமாம். பெற்ற மகளைக் கணவன் வீட்டுக்குச் சீராக அனுப்பக் கற்றுக் கொள்ளுங்கள். அது போதும்.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழுக்கு_நிலம்.pdf/131&oldid=898051" இலிருந்து மீள்விக்கப்பட்டது