பக்கம்:வழுக்கு நிலம்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 ரா. சீனிவாசன் "இதோ பாரு ஏன் இப்படிப் பேசுகிறாய். எல்லாம் அவரவர் தலைவிதி. அன்றைக்கு எழுதி வைத்தவன் மாற்றவா போகிறான்? பேசாமல் ஒரு மூலையில் கிட வீண் விவகாரம் எல்லாம் உனக்கு எதற்கு." "அதெல்லாம் முடியாது. பார்வதியை முதலிலே அவள் வீட்டுக்கு அனுப்பி வையுங்கள். அதற்கப்புறம் மருமகள் எவ்வளவு பேசினாலும் நான் ஏற்றுக் கொள்கிறேன். அடங்கிக் கிடக்கிறேன்." "ஆமாம் என்றைக் கிருந்தாலும் பார்வதி அங்கேதான் போக வேண்டும். ஆனால் பார்வதிதானே அந்தப் பேச்சை எடுக்க வேண்டாம் என்று பிடிவாதம் செய்கிறாள்." "மன வருத்தத்திலே ஆயிரம் சொல்லுகிறாள். என்னை அங்கே அனுப்பு என்று அவள் வேண்டுவாளா? பெற்றவர் களுக்கு அல்லவா அந்தக் கடமை உணர்வு வேண்டும்?" "என்ன கடமையோ, கத்தரிக்காயோ! அவன் ஒன்றும் நிம்மதியாக வைத்து வாழ்வான் என்று எனக்குத் தெரியவில்லை. சுற்றிலும் ஏகப்பட்ட கடன். போதாக் குறைக்குக் கெட்ட பழக்கங்கள். இவள் போய் அங்கே என்ன செய்கிறது?" "என்ன செய்கிறது...? அவனோடு சேர்ந்து கஷ்டப்படு கிறது. இங்கேதான் இவள் இருக்க நிழல் இல்லையே!” "அங்கேமட்டும் என்னவாம்! இருந்த வீட்டைக்கூடக் கடன்காரன்கள் கைப்பற்றிவிட்டார்களாம். பெட்டி படுக்கை எல்லாம் சுற்றிக்கொண்டு வேறு எங்கேயோ இருக்கிறானாம். அவன் அக்காவைப் பம்பாய்க்கு அனுப்பி விட்டானாம். தனியாக அவன் விருப்பப்படி சுற்றிக் கெட்டுப்போகிறானாம். பட்டணத்திலேயிருந்து வந்த என் நண்பர் இதை ஒரு கதையாகச் சொன்னார்." கதையைக் கேட்பது போல் அந்த நிகழ்ச்சிகளைப் பார்வதி கேட்கவில்லை. துன்பமான உண்மை நிகழ்ச்சியைக் கேட்பது போலத்தான் அவளுக்கு இருந்தது. தான் இருந்துவந்த அந்த வீட்டைக் கடன்காரன் கைப்பற்றினான் என்ற செய்தி அவளுக்கு எல்லையற்ற துன்பம் தந்தது. தான் கொண்டு சென்ற வெள்ளித் தட்டுகள், குவளைகள், பித்தளைச் சாமான்கள், எவர்சில்வர் பாத்திரங்கள், கட்டில், பீரோ, இன்னும் அங்குச் சீர் என்னும் பெயரால் சீர்பெறாமல் ஒழிந்து போன சாமான்கள் இவை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழுக்கு_நிலம்.pdf/132&oldid=898053" இலிருந்து மீள்விக்கப்பட்டது