பக்கம்:வழுக்கு நிலம்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழுக்கு நிலம் 131 எல்லாம் கவனத்திற்கு வந்தன. தான் அங்குக் குடித்தனம் செய்து வந்த சமையல் அறை, தோட்டம், அதிலிருந்த வாழைக் கன்றுகள், அதற்கு ஊற்றிய தண்ணிர், தான் பெருக்கிய முற்றம், கூடம், படங்கள் மாட்டியிருந்த கூடம், அவ்வப்போது சாய்ந்து கொண்டு உட்கார்ந்திருந்த இரும்புத் தூண்கள், உள்ளேயிருந்த படுக்கையறை, அவரோடு பேசி மகிழ்ந்த இடங்கள், அதற்குப் பக்கத்தில் இருந்த இரும்புக் கம்பி உடைந்த சன்னல், தெருப் பக்கச் சன்னல் இவையெல்லாம் அவள் மனத்தில் இடம் பெற்று நின்றன. "போதாக்குறைக்கு அவன் இன்சால்வெண்ட் வேறு கொடுத்திருக்கிறானாம்" என்று எடுத்த கதைக்கு ஒரு முடிவும் கூறினார். "அப்படியென்றால் இனிமேல் கடன்காரர் தொல்லை இல்லாமல் அவன் வாழ முடியும்.” "ஆமாம். ஆனால் இந்த அவமானம் என்றும் மாறாது. அந்தப் பக்கம் நாம் யாரும் தலைகாட்ட முடியாது. இழந்த கவுரவத்தை மீண்டும் எந்தக் காலத்திலும் பெறமுடியாது. அவனை நாலு காசுக்கு எவனும் மதிக்க மாட்டான். அவனை நம்பிச் சல்லிக்காசு கொடுக்க மாட்டார்கள்." "நல்லது தானே. இனிமேல் அவன் குடும்பம் சீர்படும். கடனில்லாமல் வாழ்ந்தாலும் கால் வயிறு கஞ்சியாவது நிம்மதியாகக் குடிக்கலாம்." "இந்த அவமானம் நமக்குத்தான். நம்ம சம்பந்திகள் காதுகளுக் கெட்டாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.” "ஆமாம். எட்டினால் அப்படியே அள்ளிக் கொடுக்கப் போகிறார்கள்.” சிவராமனைப் பற்றிப் பேச்சு எழுந்தபோது மாணிக்கம் ஒன்றும் பேசாமல் இருந்தான். அவன் காதில் மட்டும் இந்தச் சொற்கள் விழுந்துகொண்டிருந்தன. தான் எது பேசினாலும் எதிர்ப்பு வரும் என்று அஞ்சி நாவைக் கடிந்து காத்துக் கொண்டான் என்பது அவன் சும்மா இருந்ததிலிருந்து தெரிந்தது. பிறகு அவன் அந்த இடத்தைவிட்டு எழுந்து வெளியே போய் விட்டான். வெளியே போனலாவது அமைதி கிடைக்கும் என்ற நம்பிக்கையால் தான் அந்த இடத்தை விட்டுச் சென்றிருக்க வேண்டும். பிறகு அவர்கள் விடாமல் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்ததில் அவன் அக்கரை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழுக்கு_நிலம்.pdf/133&oldid=898055" இலிருந்து மீள்விக்கப்பட்டது