பக்கம்:வழுக்கு நிலம்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 ரா. சீனிவாசன் காட்டாதது போலவே பார்வதியும் அக்கரை காட்டவில்லை. பார்வதி தெரு கடையில் வந்து உட்கார்ந்தாள். வீட்டில் நடந்த சண்டையைப் பற்றியே அவள்மனம் வட்டமிட்டுக் கொண்டிருந்தது. அவள் பார்வை மட்டும் தெருவை நோக்கியே வண்ணம் இருந்தது. அவள் உள்ளம் சண்டையின் நிகழ்ச்சிகளிலும், அதை ஒட்டி அமையும் வாழ்விலும் அலைந்துகொண்டிருந்தது. தான் அங்கே இருப்பதால் தானே சண்டை உண்டாயிற்று என எண்ணினாள். அதே சமயம் தான் அங்கே போவதற்கில்லையே என்ற வருத்தம் அவளை வாட்டிற்று. 19 சிவராமன் தங்கியிருந்த அறை மாடியில் இருந்தது. சிறு அறையாக இருந்தாலும் நல்ல காற்று வசதி இருந்தது. அந்த அறையோடு சேர்ந்த சமையல் அறையும் இவனுக்கே விடப் பெற்றிருக்கிறது. ஆனால் அது இவனுக்கு உபயோகம் இல்லாமல்தான் இருந்தது. தான் இன்னான் என்று மற்றவர் களுக்கு அறிமுகமாகாமல் ஒதுங்கி வாழ்வதற்கு அத்தியாகராய நகர் பகுதியே பிடித்திருந்தது. கோடம்பாக்கம் நெடுஞ் சாலையும், தியாகராய நகர்ப் பகுதியும் சந்திக்கும் இடத்திலே தான் இவன் வீடு இருந்தது. அந்த வீடு இன்னும் சரியாகக் கட்டி முடியாமல் வெளிப்பக்கம் வெள்ளை பூசாமல் இருந்தது. கீழே அந்த வீட்டுக்குரியவர்கள் வசித்து வந்தார்கள் என்பது அந்த வீட்டில் இருந்த மாடும் கொட்டகையும் எடுத்துக் காட்டின. அமைந்தகரையில் தான் வாழ்ந்த பகுதியில் தனக்கு அறிமுகமானவர்கள் யாரையும் சந்திக்க நேராது என்ற காரணத்தால்தான் அந்த இடத்தைத் தேடிப் பிடித்திருக்க வேண்டும். அந்தப் பகுதியில் வாழ்பவர்கள் ஒருவரைப் பற்றி ஒருவர் கவலை கொள்ளாமல் பற்றற்றவர்கள் போல் வாழ்ந்து வந்தமையும் அவனுக்கு அந்த இடத்தைத் தேடிப்பிடிக்க ஒரு காரணமாக இருக்கவேண்டும். அங்கே தங்கிய இரண்டொரு நாட்கள் அவனுக்கு மனம் நிம்மதியாக இருந்தது. அவன் இருந்த அறையைத் தன் பழைய போட்டோக்களைக் கொண்டு அலங்கரித்தான். பல்கலைக் கழகத்தில் பட்டமளிப்பு விழாவின்போது எடுத்த படம் மேஜைமேல் இருந்தது. கையில் அந்தச் சுருண்ட கடிதம் பளிச்சென்று காட்சியளித்துக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழுக்கு_நிலம்.pdf/134&oldid=898057" இலிருந்து மீள்விக்கப்பட்டது