பக்கம்:வழுக்கு நிலம்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழுக்கு நிலம் 9 133 கொண்டிருந்தது. அந்தச் சதுரமான தொப்பியும் கருப்புக் கோட்டும் அடையாளம் கண்டு கொள்ள முடியாமல் செய்து விட்டது. அவன் உட்கார்ந்திருந்த இடத்திற்கு நேர் பின்புறம் அவன் திருமணத்தின் போது பார்வதியோடு சேர்ந்து எடுத்துக் கொண்ட படம் மாட்டப் பெற்றிருந்தது. அது கொஞ்சம் உயரத்தில் சாய்ந்து கிடந்தது. அன்றாடம் கிழிக்கும் காலண்டர் ஒன்று புதிதாக மாட்டியிருந்தான். அந்த வீட்டுக்காரர் கொடுத்துதவிய மேசையும் நாற்காலியும் அந்த அறையை அலங்கரிப்பதற்குப் பதிலாக அந்த அறையை அடைத்துக் கொண்டிருந்தன. அது பல தலைமுறைகளைக் கண்டு அனுபவம் பெற்று ஆட்டம் கொடுத்துக் கொண்டிருந்தது. அறையில் உட்கார்ந்திருந்த வண்ணம் தனக்குப் பழக்கமான பொழுது போக்காகிய சிகரெட்டைப் பிடித்துக் கொண்டிருந்தான். யாரோ கீழே கதவு தட்டும் சப்தம் கேட்டது. அந்த வீட்டுக்குரியவரைத் தவிர அவனுக்கு யாரும் அறிமுகமானவர்கள் இல்லாததால் அவராகத்தான் இருக்க வேண்டும் என்று உணர்ந்து கொண்டான்; கையிலிருந்த சிகரெட் துண்டைக் கீழே போட்டான். அப்போதும் அது அணையாமல் இருந்தது. தன் காலால் அதை நசுக்கி அணைத்து ஒருபுறம் தள்ளிவிட்டுக் கதவைத் திறக்கச் சென்றான். கதவு திறந்ததும் வீட்டுக்குரியவர் மாடியில் இருந்த இவன் அறைக்கு வந்தார். "மூன்று காலே போதும்" என்று நின்று கொண்டிருந்த உடைந்த அவருக்குப் பழக்கமான நாற் காலியில் வந்து உட்கார்ந்தார். "சார்! எப்போது உங்கள் குடும்பத்தை அழைத்துக் கொண்டு வரப் போகிறீர்கள்?" "எழுதியிருக்கிறேன். இன்னும் சில நாட்களில் அனுப்பி விடுவார்கள். அவளுக்கு உடம்பு சரியாக இல்லை. நாட்டு வைத்தியம் நல்லது என்று சொன்னார்கள். அதற்குத்தான் அனுப்பியிருக்கிறேன்." "சீக்கிரம் அழைத்து வந்து விடுங்கள். தனியாக இருந்தால் உடம்புக்கு ஒத்துக் கொள்ளாது. இந்த ஹோட்டல் சாப்பாடு சாப்பிட்டுக்கொண்டு ஆயுளை “இன்ஷ்யூரன்ஸ் செய்து கொண்டால் சீக்கிரத்தில் பலன் கிடைக்கும்.” சிவராமன் சிரிக்கத் தொடங்கினான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழுக்கு_நிலம்.pdf/135&oldid=898059" இலிருந்து மீள்விக்கப்பட்டது