பக்கம்:வழுக்கு நிலம்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 • ரா. சீனிவாசன் "அதுவும் நல்லதுதான். அவர்கள் சாப்பாடு மோசமாக இருப்பதால்தான் இந்தக் காலத்திலே பலபேர் கல்யாணம் செய்து கொள்கிறார்கள். ஹோட்டல் சாப்பாடு நன்றாக இருந்து விட்டால் எவன் குடும்பத்தைப் பற்றிக் கவலைப்படப் போகிறான்." அவரும் அதை ஒப்புக் கொள்வதைப் போல் ஒரு சிரிப்புச் சிரித்தார். 'இதுதான் உங்கள் கலியாணத்திலே எடுத்த படமா?" "ஆமாம் சார்.? ஏன்.? நல்லா இல்லைங்களா?" "என்ன சார்..? நிரம்ப நாள் கூட ஆகவில்லை போல் இருக்கிறது. நீங்கள் அப்படியே மாறாமல் இருக்கிறீர்கள். கொஞ்சம் இளைத்திருக்கிறீர்கள். அவ்வளவுதான். அந்த அம்மா, மூக்கும் முழியும் அழகாகத்தான் இருக்கிறார்கள். முகத்தில் லக்ஷிமி தாண்டவமாடுகிறது." "ஆனால் கையிலேதான் லக்ஷ்மி தாண்டவமாட வில்லை. படத்திலே இருக்கிறாப் போல அவ்வளவு அழகாக இருக்கமாட்டாள். கொஞ்சம் மாநிறமாக இருப்பாள்." "சரிதான். சாகடிாத் சிவபெருமான் மனைவி பார்வதி கூட மாநிறந்தான் சார்." "என் மனைவி பெயர்கூட பார்வதிதான். அதனால் தான் அவளும் மாநிறமாக இருக்கிறாள் போல இருக்கிறது" என்று வேடிக்கையாகச் சொல்ல ஆரம்பித்தான். - "நிறம் மாநிறமா இருந்தால் என்ன சார்? குணம்தான் தங்கமாக இருக்க வேண்டும். நிறம் தங்கமாக இருந்து குணம் கறுத்து விட்டால்.” - - "அவன் பரோபகாரி ஆகிறாள்" என்று சொல்ல வாயெடுத்தவன், முன்பின் பழகாதவர்களிடம் நகைச்சுவை சில சமயங்களில் பகைமையை உண்டாக்கிவிடும் என்று நாவை அடக்கிக்கொண்டான். - "வீடு எல்லாம் செளகரியமாயிருக்கிறதா?" -எந்தக் குறை சொல்லலாம் என்று யோசித்தான். வீட்டைப்பற்றி அடிக்கடிக் குறைகள் சொன்னால் அவர் அடிக்கடித் தொந்தரவு செய்யமாட்டார். இதைச் செய்து கொடு, அதைச் செய்து கொடு, வீட்டு ஜன்னலுக்கு கொக்கி இல்லை, மேலே ஒரு பக்கம் ஒழுகுகிறது என்று சொல்லிக் கொண்டிருந்தால்தான் அவர் அடிக்கடி வந்து பேசுவதை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழுக்கு_நிலம்.pdf/136&oldid=898061" இலிருந்து மீள்விக்கப்பட்டது