பக்கம்:வழுக்கு நிலம்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழுக்கு நிலம் 135 நிறுத்துவார் என்று எண்ணினான். ஆனால் அதே சமயத்தில் அதே காரணமாகக் காலி செய்யச் சொன்னால் என்ன செய்வது என்று தயங்கினான். அதனால் வீட்டைப்பற்றி ஒரு குறையும் சொல்ல முன்வரவில்லை. "பாவா இல்லை சார்! எப்படியிருந்தால் என்ன? நேர்ந்து கொண்டுதான் போக வேண்டும்.” "ஆபீசுக்குப் போகவில்லைங்களா?” "ஒரு வாரம் லீவு எடுத்திருக்கிறேன். இன்னும் இரண்டொரு நாட்களில் அந்த லீவும் முடிந்துவிடும்." "சார்! இப்படியெல்லாம் கேட்கிறேன் என்று வருத்தப் படாதீர்கள். கொஞ்சம் பழகிவிட்டால் அந்நியோந்தியமாகப் பழகுவது என் சுபாவமாகிவிட்டது." "அதனால் என்ன..! அந்த மாதிரி பழகுகிறவர்கள் வர வரக் குறைந்து விட்டார்கள். தாம் என்னமோ, வேலை என்னமோ, வீடு என்னமோ என்று இருக்கிறவர்கள்தாம் இந்தக் காலத்திலே அதிகம் இருக்கிறார்கள். பக்கத்திலே யார் குடித்தனம் நடத்துகிறார்கள் என்று கேட்டால் தெரியாத துறவிகள் தாம் இந்தப் பட்டணத்தில் இருக்கிறார்கள். நாகரிகம் வளர வளர மனிதன் ஒதுங்கி வாழக் கற்றுக் கொள்கிறான். திண்ணை போட்ட வீடுகளை எல்லாம் சிறைக் கம்பிகள் போல் அடைக்கக் கற்றுக் கொண்டார்கள். நீங்கள் அதற்கு விதி விலக்காக இருக்கிறீர்கள்" என்று சொல்லிய வண்ணம் ஜேபியில் இருந்த சிகரெட் பெட்டியை எடுக்க அவன் கைகள் விழைந்தன. சட்டென்று அவர் முன்னிருக்கும் நினைவு வரவே சிகரெட் எடுக்காமல் சாவியை எடுத்து மேஜைமேல் வைத்தான். "எங்கேயாகிலும் வெளியே போகிறீர்களா?" "இல்லை சார் கொஞ்ச நேரத்திலே போகலாம் என்று இருக்கிறேன். பாண்டிபஜார் வரையிலும் போய்க் காப்பி சாப்பிட்டு வரலாம் என்றிருக்கிறேன்." "அதற்குத்தான் குடும்பம் வேண்டும் என்பது. இந்த மாதிரி ஹோட்டலுக்குப் போனால் சம்பாதிக்கிற காசு நாலு மிச்சப்படுத்த முடியுமா! என்ன இருந்தாலும் வீட்டிலே இருந்து சாப்பிடுகிற வழி வராது சார்." "அதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. சுற்றிச் சுற்றிக் குடும்பத்தோடுதான் அங்கே இருக்க முடியும் என்ற கருத்தை வற்புறுத்துவதை உணர்ந்து கொண்டான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழுக்கு_நிலம்.pdf/137&oldid=898063" இலிருந்து மீள்விக்கப்பட்டது