பக்கம்:வழுக்கு நிலம்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 ரா. சீனிவாசன் சிவராமனுக்கு அந்த ஆள் வெளியே போனால் போதும் என்றாகிவிட்டது. அந்த ஆளை வெளியே அனுப்புவதற்காவது காப்பி குடிக்கச் செல்லலாமா என்று கூட யோசிக்க ஆரம்பித்தான். "சரி! நான் வருகிறேன். ஏதாவது குறை இருந்தால் சொல்லுங்கள்” என்று சொல்லிய வண்ணம் வெளியே புறப்பட்டார். "அப்பாடா! சரியான மனுஷன்! என்று சொல்லிக் கொண்டு ஜெபியில் இருந்த சிகரெட்டை எடுத்துப் பற்ற வைத்தான். - "ஒரு வேளை நம்மைப் போல ஆசாமியாக இருப்பானோ...! கடன் கேட்டுப் பழக்கம் இருக்குமோ? அதற்காகவாவது இந்தப் பீடிகையும் விசாரிப்பும் அவ்வப் போது நடை பெறுகிறதா...?" என்று சிந்திக்க ஆரம்பித்தான். "சே! இருக்காது. அவருடைய எண்ணம் எல்லாம் நான் குடும்பத்தோடுதான் இருக்க வேண்டும் என்பது தான்" என்று முடிவுக்கு வந்தான். "சார்! தனி ஆளாக இருந்தால் இங்கே வீடு கொடுக்க முடியாது." "இல்லை சார். நான் திருமணமானவன். மனைவிக்கு உடம்பு சுகமில்லை. இன்னும் கொஞ்ச நாளில் வந்து விடுவாள்." "அப்படியானால் பரவாயில்லை சார்! நீங்கள் வந்து குடியேறலாம்." இந்தப் பேச்சு வார்த்தைகள் அவன் நினைவில் எழுந்தன. அதே சமயம் அதற்கு முன்னால் தான் வீடு தேடும் படலத்தில் அவதிப்பட்ட நாட்கள் கவனத்திற்கு வந்தன. "நீங்கள் என்ன சாதி?” "நான் மனித சாதி.” "உங்களுக்குத் திருமணமாகி இருக்கிறதா?” "ஆகவில்லை." "அப்படியானால் தனியாகத்தான் இருக்கிறீர்களா?” "ஆமாம்.” "அப்படியானால் உங்களுக்கு வீடு கிடையாது.” இந்த வாசகங்களைக் கேட்டுப் பழகிப் போன காரணத்தால்தான் இவரிடம் வரும்போது மணமான

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழுக்கு_நிலம்.pdf/138&oldid=898065" இலிருந்து மீள்விக்கப்பட்டது