பக்கம்:வழுக்கு நிலம்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழுக்கு நிலம் 0 137 செய்தியைத் தெரிவிக்க வேண்டியதாயிற்று. அதை அடுத்து அவரைத் திருப்பிபடுத்துவதற்காகவே திருமணப் போட்டோவையும் அங்கே மாட்டி வைக்க வேண்டியதாயிற்று. சரியான மனிதர்தான்! இவருக்காகவாவது குடும்பம் நடத்த வேண்டியிருக்கிறது. எப்படியும் வேறு வீடு பார்த்துத்தான் தீரவேண்டும். இங்கே இருந்து காலம் தள்ள முடியாது. அதுவரையும் ஏதாவது சாக்குப் போக்குச் சொல்லிக் காலம் தள்ள வேண்டியதுதான். பார்வதியிட மிருந்து வந்தது போல ஏதாவது கடிதம் நானாவது எழுதி அவர் கேட்கும் போது, "இதோ, அவள் எழுதியது” என்று ஏதாவது சொல்லிக் காலத்தைத் தள்ளலாம்” என்று சிந்திக்க ஆரம்பித்தான். முடிந்த சிகரெட்டுத் துண்டை அணைத்துப் போட்டு விட்டு வெளியே வந்தான். அது அவர் கண்ணில் படக் கூடாது என்பதற்காகக் கொஞ்சம் அக்கரை காட்டி அதை ஒரு புறமாக எடுத்துப் போட்டான். சின்ன இடமாக இருந்தாலும் அந்த மாடியறைகள் அவனுக்கு ஒர் நிம்மதி தந்தன. அதனால் அந்த வீட்டை விட மனமில்லாத காரணத்தால் இந்த மாதிரி எல்லாம் எண்ண வேண்டி இருந்தது. பரந்த வானமும் திறந்த வெளியும் அந்த அறையிலிருந்து காட்சி தந்து அவனுக்கு அமைதியைத் தந்தது. அவனுக்கு முன் இருந்த காலண்டர் காலத்தின் அளவை அறிவித்துக்கொண்டிருந்தது. இன்னும் இரண்டொரு நாளில் அவன் போக வேண்டிய அலுவலகம் அவன் கண்முன் வந்து நின்றது. அடுக்கடுக்காகச் சேர்ந்திருக்கும் குறிப்பேடுகள் அவன் மனக்கண் முன் வந்து நின்றன. ஆனால், கவலையில்லா மனத்தோடு எதையும் சீக்கிரம் செய்ய முடியும் என்ற எண்ணம் அவனுக்கு ஆறுதலைத் தந்தது. பழைய நினைவுகளும் அவன் மனத்திரையில் ஓடின. வெளியே சில சமயங்களில் வந்து நிற்கும் ஈட்டிக்காரனின் இரக்கமற்ற பார்வையும், அந்தப் பார்வையைக்கண்டு அவன் நடுங்கிய நடுக்கமும், அந்த நடுக்கத்தைப் போக்கிய சாரதாவின் இரக்கமும், அவள் செய்த உதவியும், அவளோடு தொடர்ந்து சென்ற அந்த ஒரிரு நாட்களும், அவளுடைய உதவி செய்யும் தூய உள்ளமும் அவன் நினைவுக்கு வந்தன. அதே சமயம் சாரதாவைப் பார்க்கவேண்டும், அவளுக்கு நன்றி கூறவேண்டும் என்ற உணர்வும் அவ்வப்போது அவன் மனதில் தோன்றியது. காலியாக இருந்த அவன் உள்ளத்தில் எப்படியோ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழுக்கு_நிலம்.pdf/139&oldid=898066" இலிருந்து மீள்விக்கப்பட்டது