பக்கம்:வழுக்கு நிலம்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 ரா. சீனிவாசன் அவள் அழகிய வடிவம் மெல்லக் - குடிகொள்ளவும் ஆரம்பித்தது. அந்த ஒரு நாள் கழிந்தால் மறுநாள் அலுவலகத்திற்குப் போகலாமே என்ற ஆர்வம் அவனை உந்திக்கொண்டிருந்தது. மேஜையின்மேல் இருந்த கோழி முட்டை வடிவமான கண்ணாடியின் முன் நின்று தலை வாரிக் கொண்டான். பெட்டியில் இருந்து வெள்ளை ஜுப்பாவை அணிந்து கொண்டான். அவன் உடுத்தியிருந்த வேஷ்டியும் அழுக்கில் லாமல் சுத்தமாக இருந்தது. மறுபடியும் கலைந்த தலைமயிரை வாரிக் கொண்டான். - கவனமாக மணி பர்சையும், சிகரெட் டப்பியையும் எடுத்து ஜேபியில் போட்டுக் கொண்டான். கைக் குட்டையை எடுத்துக் கொண்டு அறையின் வெளிப்பக்கத்தைப் பூட்டிக் கொண்டு வீட்டை விட்டு வெளியே நடந்தான். 20 மூன்று பெண்களும் ஒன்றாக உட்கார்ந்து பேசும் காட்சியை அந்த வீடு இழந்து விட்டது. தாயும் மகளும் ஒரு கட்சி; மருமகள் மற்றொரு கட்சி என்பது போலத் தனித் தனியே கட்சிகள் உண்டாகியது என்பதை அவர்கள் பழகிய விரதம் காட்டியது. "நாவினால் சுட்ட வடு ஆறாது" என்ற நிலையில் அவர்கள் பழகி வந்தார்கள் என்பது அவர்கள் கலந்து பேசாத நிலைமையே காட்டியது. வெளியே மாணிக்கத்தின் தந்தை உட்கார்ந்திருந்தார். அவர் நெற்றியின் சுருக்கங்கள் இரண்டு மூன்று விபூதி பட்டை போட்டது போல் அமைந்திருந்தன. பற்கள். சில விழுந்து விட்ட காரணத்தால் கன்னத்தில் இருபுறமும் குழிகள் விழுந்து இருந்தன். முகrவரம் செய்யாத காரணத்தால் முட்கள் போல வெள்ளைமயிர்கள் நீண்டு வளர்ந்திருந்தன. அவற்றைத் தடவிக் கொண்டு ஆழ்ந்த சிந்தனையில், சாய்ந்த திண்ணையில் படுத்துக்கொண்டிருந்தார். தலையில் ஒரு தலையணை அவர் நரைத்த தலைக்குப் பாதுகாப்பு அளித்தது. - மகன், மாமனார் வீட்டைச் சார்ந்து விட்டால் தன் நிலைமை என்ன ஆவது என்ற கவலை அவர் நெஞ்சில் வேர்கொள்ள ஆரம்பித்தது. அந்தக் கவலையின் காரணமாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழுக்கு_நிலம்.pdf/140&oldid=898069" இலிருந்து மீள்விக்கப்பட்டது