பக்கம்:வழுக்கு நிலம்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழுக்கு நிலம் 139 அவர் மனத்தில் பல எண்ணங்கள் தோன்றி மறைந்து கொண்டிருந்தன. "ஏழை, பணக்காரன் வீட்டில் சம்பந்தம் செய்து கொண்டால் ஏழை அதிகாரம் பெற முடியாது. அந்தக் குடும்பத்தின் ஒரு கருவியாகத்தான் இருந்து வாழலாமேயன்றி முழு உரிமையும் பெறமுடியாது. அவன் மாமனார் வீட்டுக்குப் போய் விட்டால் தன்னிந்தனியனாக என் இறுதி நாட்களைக் கழிப்பது எவ்வாறு? எஞ்சியுள்ள நிலங்களைக் கொண்டு கஞ்சியாவது குடிப்பது எப்படி? அந்திய காலத்தில் கூப்பிட்ட குரலுக்கு எடுக்கப் பிடிக்க யார் வருவார்கள்” என்ற இத்தகைய சிந்தனைகள் தோன்றி மறைந்து கொண்டிருந்தன. "அப்பா! அப்பா!' என்று கூப்பிட்ட குரலுடன் பார்வதி வெளியே வந்தாள். 'அம்மாவுக்கு மார்பு வலி ரொம்ப அதிகமாக இருக்கிறதாம்." "அவளுக்கு ஒன்றும் வேலை இல்லை. ஏதாவது நினைத்துக் கொண்டு வேதனை பட்டுக்கொண்டு இருப்பாள்" என்று சொல்லிய சொற்களில் மனவேதனையோடு மற்றவர் போல அந்த இடத்தைவிட்டு எழுந்து உள்ளே போனார். கூடத்தில் பழம்பாய் ஒன்றில் கந்தல் புடைவை ஒன்றை விரித்துப் பார்வதியின் தாய் படுத்திருந்தாள். பார்வதி கழுத்திலும் மார்பிலும் நெற்றியிலும் தேய்த்த அமிருதாஞ் சனத்தின் நெடி அடித்துக் கொண்டிருந்தது. "என்ன உடம்பு? ஏன் ? என்ன செய்கிறது.” "உடம்புக்கு ஒன்றும் இல்லை. நெஞ்சுதான் வலிக்கிறது. பாரமாக இருக்கிறது." "உனக்கு ஒன்றும் வேலை இல்லை. மகளைப் பற்றி நினைத்துக் கொண்டு வேதனை படுவாய். அதனால்தான் இந்த நெஞ்சுவலி மார்புவலி தலைவலி எல்லா வலியும். செடி வைத்தவன் தண்ணிர் ஊற்றாமலா போய் விடுவான்.” "அப்படி ஊற்றவில்லையே என்ற கவலைதான் என்னை அரிக்கிறது. பெற்ற மகளைப் பெருமையோடு வாழச் செய்ய வில்லையே என்கிற ஏக்கம்தான் என் துரக்கத்தைக் கலைக்கிறது. துக்கத்தைப் பெருக்குகிறது.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழுக்கு_நிலம்.pdf/141&oldid=898071" இலிருந்து மீள்விக்கப்பட்டது