பக்கம்:வழுக்கு நிலம்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 ( ரா. சீனிவாசன் பார்வதி அடுப்பில் வெந்நீர் வைக்கச் சென்றாள். குடிப்பதற்கு நீர் கொணர அடுப்பில் தண்ணிர் வைத்து அதை வெந்நீர் ஆக்கும் முயற்சியில் ஈடுபட்டாள். "ஏன் மனதை இப்படி அலட்டிக் கொள்கிறாய்? நடந்தது நடந்து விட்டது. நம்மால் பார்வதிக்கு அரைவயிற்றுச் சோற்றுக்கு வழி இல்லாமலா போய்விடும்?" "நாம் எத்தனை நாளைக்குச் சதம் என்று எண்ணி இப்படிப் பேசுகிறீர்கள். நாளைக்கு மாணிக்கம் ஆதரிப்பான் என்று நம்பிகிறீர்கள்?" "அவன் இன்றைக்கே ஆதரிக்கும் நிலையில் இல்லை என்பதை நான் எப்பொழுதோ உணர்ந்து கொண்டேன்." "அப்படியானால் எஞ்சி இருக்கிற நிலங்களை அவள் பேரில் எழுதிவைத்து அவளை அவள் வீட்டிற்கு அனுப்பக் கூடாதா?” "மாணிக்கம் நம்மை மட்டும் ஆதரிப்பான் என்ற உறுதி என்ன இருக்கிறது? இருப்பதை மகளுக்கு எழுதி வைத்து விட்டால் நாளைக்கு நமக்கு யார் ஆதரவு? யாரை நம்பி நாம் வாழ முடியும்?” சிறிது நேரம் அவர் மனைவியாலும் பதில் சொல்ல முடியவில்லை. "என்னமோ போங்கள். எப்படியாவது செய்யுங்கள்" என்று மனச் சோர்வோடு பேச ஆரம்பித்தாள். உடம்பைத் தொட்டுப் பார்த்தார். கொஞ்சம் சூடாக இருந்தது. "ஏதாவது கஷாயம் போட்டுச் சாப்பிடு. சரியாகப் போய்விடும். அதற்குள் பார்வதி வெந்நீர் கொண்டு வந்து கொடுத்தாள். "ஏன்; மா உடம்பை அலட்டிக் கொள்கிறாய்?" "என் உடம்புக்கு ஒன்றும் இல்லை." "இதோ வெந்நீர் கொண்டு வந்திருக்கிறேன்." "சரி! இங்கே வை." . அந்த வெந்நீர் கொஞ்ச நேரம் பொறுத்துச் சூடு ஆறிவிட்டது அங்கேயே குடிக்காமல் வைத்திருந்த காரணத்தால், கம்பளி ஒன்றை எடுத்து அம்மாவின்மீது போர்த்த ஆரம்பித்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழுக்கு_நிலம்.pdf/142&oldid=898073" இலிருந்து மீள்விக்கப்பட்டது