பக்கம்:வழுக்கு நிலம்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழுக்கு நிலம் 9 141 அதற்குள் வெளியே கற்றிவிட்டு வீடு திரும்பிய மாணிக்கம் தன்தாய் படுத்திருப்பதைக் கண்டான். "அம்மாவுக்கு என்ன உடம்பு?” "நெஞ்சுவலியாம். தலை சூடாக இருக்கிறது." "ஏதாவது தைலம் போட்டுத் தேய். சரியாகப் போய் விடும்” என்று சொல்லிய வண்ணம் மீனாட்சி இருந்த அறையை நோக்கிச் சென்றான். "ஆமாம். இரவெல்லாம் என்னைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தால் நெஞ்சு வலி இருக்காதா? "எல்லாம் அவரவர் வினையை அவரவரே அனுபவிப் பார்கள்" என்று எடுத்த குரலில், ஆனால் அடுத்திருந்தவர்கள் கேளாதபடி வெடுக்கென்று பேசினாள். "அப்படியெல்லாம் சொல்லாதே மீனா! வயதானவர்கள் அப்படித்தான் எதையாவது பேசிக்கொண்டிருப்பார்கள்." "பேசட்டும். யார் வேண்டாம் என்பது? இன்று வந்த சினிமாப் படத்தைப் பற்றிப் போட்டும், என்றுமுள்ள இராமாயாண புராணக் கதைகளைப் பேசட்டும். நானா வேண்டாம் என்கிறேன்? என்னைப் பற்றி இவர்கள் ஏன் பேச வேண்டும்?" "நீ இந்த வீட்டில் ரொம்பவும் முக்கியமானவளாக இருப்பதால் உன்னைப் பற்றிப் பேசி இருக்கலாம். அதனால் உனக்குப் பெருமைதானே.” "எனக்கு இருக்கிற பெருமை என்னிடம் இருக்கிறது. ஒருவர் பெருமை கொடுத்து நான் பெரியவள் ஆகப் போவதில்லை. ஒருவர் சின்னவள் என்று சொல்லுவதாலே நான் சின்னவள் ஆகப் போவதில்லை.” "பெருமையும் சிறுமையும் பிறர் தர வாரா-." "இந்த மாதிரி எல்லாம் என்னைத் தூக்கி வைத்துப் பேசி இறக்கினால்." "ஆமாம். அப்பா வீட்டுக்குப் போய் விடுவேன் என்று சும்மா சொல்லி வை. யார் வேண்டாம் என்பது. ரஷியா அமெரிக்கா உறவிலே சமாதானம் ஏற்பட்டால்கூட மாமியார் மருமகளுக்கு எந்தக் காலத்திலும் ஒற்றுமை ஏற்படும் என்று நினைக்க முடியாது."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழுக்கு_நிலம்.pdf/143&oldid=898075" இலிருந்து மீள்விக்கப்பட்டது