பக்கம்:வழுக்கு நிலம்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 ரா. சீனிவாசன் "ஆமாம். ೨೧5ುಖ76 எனக்குத் தெரியாது. நான் எங்கள் வீட்டுக்குத்தானே போவேன். கடிதம் எழுதியிருக்கிறேன். நான் வேண்டுமானால், நீங்கள் அங்கே வாருங்கள்." - - "அம்மா வேண்டுமானால் இங்கேயே இருந்துவிடு. அதுதானே! சொல்லாமல் சொல்லி வைக்கும் குறிப்பில், சனகாதி முனிவர்க்கு உபதேசம் செய்த அந்தக் கடவுள் உன்னிடம் தோற்றுவிட வேண்டியதுதான்." "இருதலைக் கொள்ளி எறும்புப்போல் நான் இப்படியும் இல்லாமல் அப்படியும் இல்லாமல்." "அதெல்லாம் இல்லை. வேலையில்லாமல் நீங்கள் சுற்றி வருவது அவர்களுக்குப் பிடிக்கவில்லை. அவர்கள் உங்களைக் குறைவாகமதிப்பது எனக்குப் பிடிக்கவில்லை. ஏதோ மரியாதைக்காக நான் இங்கே வந்து குடித்தனம் செய்தாகி விட்டது. இந்த ஊரில் என்ன இருக்கிறது? நல்ல சினிமா என்பது இந்தப் பக்கம் வருவதே இல்லை. ஆடி ஒடித் தேய்ந்து போன படங்கள்தாம் இந்த ஊரை நாடி வருகின்றன. நினைத்தால் கார் தெருவில் வந்து நிற்கும். திருப்பினால் நேயர் விருப்பப்படி ரேடியோ பாடும். உங்களுக்கு உங்கள் அப்பா அம்மா மீது இருக்கும் பாசம் எனக்கு இருக்காதா? நான் எனக்குக் கல்யாணம் ஆகும் போதே என் அப்பாவிடம் சொன்னேன். மாமியார் வீட்டில் சென்று குடித்தனம் நடத்த எனக்குத் தெரியாது. நாலுபேருக்கு ஆக்கிப் போட அனுபவம் கிடையாது என்று சொன்னேன். அவரும், கொஞ்ச நாளையில் நீ இங்கே வந்து விடலாம். படித்த மாப்பிள்ளை சொன்ன சொல் கேட்பார். மீறி நடக்க மாட்டார் என்று அவர் உறுதி மொழிகள் தந்த பிறகுதான் நான் சம்மதித்தேன். நான் ஒன்று கேட்கிறேன். ஏன் நான் மட்டும் உங்கள் வீட்டில் வந்து வாழ்க்கைப் பட வேண்டும். நீங்கள் மட்டும் எங்கள்." "ஆமாம். உங்கள் வீட்டில் வந்து ஏன் வாழ்க்கைப் படக்கூடாது என்று கேட்கிறாய். சரியான கேள்விதான் எனக்கு வேலை கிடைக்காவிட்டால் உனக்கு நான் வாழ்க்கைப்பட வேண்டியதுதான்." "இல்லே வேடிக்கையாகச் சொன்னேன். கோபித்துக் கொள்ளாதீர்கள். எனக்கு என்னமோ இங்கு இருக்கப் பிடிக்க வில்லை. உங்கள் அம்மா என்னோடு பேசுவதில்லை. உங்கள் தங்கை என்னை மூளி அலங்காரி போல் நினைக்கிறாள். சிறு சொற்களால் பதில் சொல்லித் தன் வெறுப்பைக் காட்டுகிறாள். நான் சந்தோஷமாக இருக்க வேண்டுமானால்..வாழ்வு."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழுக்கு_நிலம்.pdf/144&oldid=898077" இலிருந்து மீள்விக்கப்பட்டது