பக்கம்:வழுக்கு நிலம்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழுக்கு நிலம் 9 143 "அந்தரங்கத்தில் பறக்கும் ஆகாய விமானம் போல் வட்டமிட்டுச் செல்ல வேண்டுமானால்...சொல்லு, எதை வேண்டுமானாலும் சொல்லு நான் மறுத்தால் எந்தக் காரியம் என்னால் சாதிக்க முடியும்?" "அடேயப்பா! உங்கள் அம்மாவிடம் ஒரு வார்த்தை யாவது அன்று எதிர்த்துப் பேசினீர்களா? நீங்கள் எல்லாம் ஒரு பக்கம். இந்த வீட்டில் நான்தான் தனி" "நீ ஒருத்தியே போதும், கவலைப்படாதே. போகட்டும். கொஞ்சம் பொறுத்துக்கொள். அம்மாவுக்கு உடம்பு செளகரியம் இல்லையாம். அப்படி என்று சொல்லுகிறார்கள். இந்தச் சமயத்திலே இந்த இடத்தைவிட்டுப் போனால் அவ்வளவு நன்றாக இருக்காது." "அவர்கள் உடம்பு சரியாக ஆகாமல் இருந்தால் நான் இங்கேயே இருக்க வேண்டுமா? நான் போகிறேன். நீங்கள் நிதானமாக அவர்கள் உடம்பைப் பார்த்துக் கொண்டு வந்து சேருங்கள்." "கொஞ்சம் கூட விட்டுக்கொடுக்க மாட்டேன் என்கிறாயே!” "விட்டுக்கொடுத்தால் ஏன் இந்தச்சண்டை வருகிறது. பேசாமல் அப்பா கடிதம் போட்டால் நீங்கள் வரவேண்டியது. அவ்வளவுதான்.” அந்த அழகிய மோகன உருவத்தினிடம் அவனுக்கு எதிர்க்கும் ஆற்றல் இல்லாமல் போய்விட்டது. அவள் கண்களில் சிறிது நீர் தாங்கினாலும் தாங்கும் இதயம் இல்லாமல் போய்விட்டது. அவள் முடிவுக்குச் செவி சாய்த்துத் தலையும் சாய்க்கவேண்டிய அவசியம் ஏற்பட்டது. இந்தத் தனியறையில் அவர்கள் பேசிய பேச்சு அவர்கள் இருவருக்குத்தான் கேட்டது. கூடத்தில் கவலையோடு இருந்த பார்வதிக்கும் தூங்கிக்கொண்டு இருந்த அவள் அன்னைக்கும் இந்தச் சொற்கள் கேட்கவில்லை. தனிமையில் பேசிய இனிய சொற்கள் அந்த அறையை விட்டு வெளியே வரவில்லை. ஆறியிருந்த வெந்நீர் தண்ணிராக மாறியது. தொட்டுப் பார்த்தால் 'சில் லென்று இருந்தது. "ஏன்மா தண்ணிர் கொண்டுவந்து வைத்தாய்?" "வெந்நீர்தான். இப்போது குளிர்ந்து விட்டது.” "சூடாக இருந்தால் நன்றாக இருக்கும்.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழுக்கு_நிலம்.pdf/145&oldid=898079" இலிருந்து மீள்விக்கப்பட்டது