பக்கம்:வழுக்கு நிலம்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 ( ரா. சீனிவாசன் மறுபடியும் அடுப்பில் இருந்த வெந்நீரைப் பெரிய ஜோடு தவலையில் கொண்டுவந்து வைத்தாள். அந்தப் பழைய வெந்நீரைக் கொட்டிவிட்டு அந்தக் குவளையில் சூடாக இதை ஊற்றினாள். அதைக் குடித்தபிறகு உடம்பு வியர்த்தது. பனித்துளி போன்று வியர்வைத் துளிகள் உடம்பை நனைத்தது. மறுபடியும் கம்பளி விரித்து நன்றாக மூடினாள். "பார்வதி, நீ போய்த் தூங்கு." "இருக்கட்டும் அம்மா. நீ கஞ்சி குடித்த பிறகு நான் தூங்குகிறேன், அடுப்பில் பார்லி அரிசி கஞ்சி போட்டிருக் கிறேன். சுரத்திற்கு நல்லது." "எனக்குச் சுரம் ஒன்றும் இல்லைம்மா. உடம்பெல்லாம் ஒரே வலியாக இருக்கிறது. அவ்வளவுதான்." "நீ போய்ப் படுத்துக் கொள். பசி எடுத்தால் எழுப்பு கிறேன்.” மிகவும் பலஹீனமான குரலில் இப்பேச்சு வந்தது. அம்மாவைத் திருப்திபடுத்துவதற்காகப் பார்வதி சற்றுத் தொலைவில் பாயைப் போட்டுப் படுக்கத் தொடங்கினாள். "வழக்கமான தபால்காரன் கடிதம் ஒன்று கொண்டு வந்து கொடுத்தான். ஆவலாக அதைப் பிரித்துப் படித்தாள்: "நீ உடனே வர வேண்டியது. என்னால் உன்னைப் பிரிந்திருக்க முடியவில்லை. உடனே அப்பாவை அழைத்துக் கொண்டு வர வேண்டியது.” உன் அன்பும் பிரியமும் உள்ள, சிவராமன். என்று இறுதியில் கையொப்ப மிட்டிருந்தது. "அப்பா! அப்பா! உடனே புறப்படுங்கள்." "நீ போம்மா. நான் வர்ரேன்.” பார்வதி மட்டும் சென்னையை அடைந்தாள். "பார்வதி ! இப்படிக் கூடவா நீ வைராக்கியம் பிடிப்பாய்..?” "உங்களைத்தான் மோகினித் தெய்வம் பிடித்து ஆட்டுகிறது. அதனால்தான் என்னை அடியோடு மறந்து விட்டீர்கள்.” "அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை. பார்வதி! அருகில் வா ஏன் வெட்கப்படுகிறாய்? அந்தப் பழைய வெட்கம் உன்னை இன்னும் விடவில்லையே!”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழுக்கு_நிலம்.pdf/146&oldid=898081" இலிருந்து மீள்விக்கப்பட்டது