பக்கம்:வழுக்கு நிலம்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழுக்கு நிலம் 145 நாணித் தலைகுனிந்து நின்றாள். "பார்வதி! இப்படி வெட்கப்படாதே." அவன் அன்புக் கரங்கள் அவளைத் தழுவ விழைந்தன. விண்ணிலே பிறைச் சந்திரன் சிறிது வெளிச்சம் தந்து கொண்டிருந்தான். மீன்கள் எல்லாம் வழக்கம் போல் மின்னிக்கொண்டிருந்தன. தென்றல் மெல்ல அவள் உடலைத் தடவிக் கொடுத்து அவளை இன்துயிலில் ஆழ்த்தியது." "பார்வதி! பார்வதி!” சட்டென விழித்தாள். அம்மாவின் குரல் என்பதைத் தூக்கத்திலிருந்து விழித்து உணர்ந்தான். அவரைச் சந்தித்தது அவ்வளவும் கனவு என்று துரக்கம் கலைந்ததும் உணர ஆரம்பித்தாள். வாசலில் ஆகாயத்தைப் பார்த்தாள். விண்மீன்கள் தன்னைப் பார்த்துச் சிரிப்பது போல இருந்தன. பிறைச் சந்திரன் புன்முறுவல் பூத்தது போல அதன் வளைவு காணப்பட்டது. தென்றல் சிரிப்பது போல இருந்தது. "இதோ கஞ்சி கொண்டு வருகிறேன்” என்று எழுந்து அடுப்பங்கரைக்குச் சென்றாள். கனவுலகத்திலிருந்து உண்மை உலகம் வரக் கொஞ்ச நேரம் பிடித்தது. 21 அன்று ஆபீசில் சிவராமன் கொஞ்சம் சுறுசுறுப்பாகவே இருந்தான். மலை போல் குவிந்திருந்த குறிப்பேடுகளைக் கண்டு அவன் மலைத்ததாகத் தெரியவில்லை. அவன் மனம் மிகவும் இலேசாக இருந்தது. அவனால் அது ஆபீஸ் என்று மறக்க முடியுமானால் வாய்விட்டுப் பாடச் சொன்னாலும் பாடி இருப்பான். எந்தப் பாட்டும் தெரியாவிட்டாலும் "வாக்குண்டாம் மாமலராள் நோக்குண்டாம்" என்றாவது இளமையில் மனப்பாடம் செய்திருந்த பழைய பாட்டைத் தனிப்பொருள் படப் பாடியிருக்க முடியும். தலைமை குமஸ்தா தணிகாசலம் ஒருவாரம் சிவராமன் வராததால் விசாரிக்க ஆரம்பித்தார். “எப்பொழுதும் அதிகமாக லீவு போடாத ஆள் இப்பொழுது மனம் வந்து எப்படியப்பா லீவு போட்டாய்?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழுக்கு_நிலம்.pdf/147&oldid=898083" இலிருந்து மீள்விக்கப்பட்டது